7 மாத விவசாய போராட்டம்.. இன்று நாடு முழுக்க அணி திரளும் விவசாயிகள்.. ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்
டெல்லி: விவசாய போராட்டம் தொடங்கி 7 மாதம் முடிந்ததை நினைவு கூறும் விதமாக இன்று நாடு முழுக்க ஆளுநர் மாளிகைகள் முன் விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன.
மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது 3 விவசாயங்களுக்கு எதிராக நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020; விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்ட (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் , 2020. ஆகிய மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக மக்கள் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று நாடு முழுக்க ஆளுநர் மாளிகைக்கு முன் விவசாய சங்கங்கள் போராட்டங்களை நடத்த உள்ளனர். 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சார்பில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மிகப்பெரிய அளவில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த வருடம் நவம்பர் 26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினார்கள். இந்த போராட்டத்தின் 7 மாத முடிவை நினைவு கூறும் வகையில், இன்று டெல்லியில் மாபெரும் போராட்டங்களை நடத்த உள்ளனர்.
விவசாயம் காப்போம், ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் இன்று டெல்லி சாலைகளில் பேரணி செல்ல உள்ளனர். இந்தியாவில் எமர்ஜன்சி கொண்டு வரப்பட்டது ஜூன் 26ல். அது எப்படி கருப்பு நாளோ அதேபோல் இன்று நிலவும் சூழ்நிலையும் கருப்பு தினமாகவே பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் நடக்க உள்ள போராட்டங்களை தொடர்ந்து டெல்லி மெட்ரோ சேவை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விதான் சவுதா ரயில் நிலையம் மொத்தமாக பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. போராட்டத்தில் பல விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் சாலையில் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விவசாய போராட்டத்தை முன்னிட்டு நாடு முழுக்க ஆளுநர் மாளிகைகள் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications