Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெஜ்ரிவால் மேஜிக்.. பாஜகவுக்கு நோ சான்ஸ்! டெல்லியில் 3வது முறையாக ஆம் ஆத்மி வெல்லும்! புது சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில் அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெல்லவே வாய்ப்புகள் அதிகம் என புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவால் போட்டியைத் தர முடியும் என்ற போதிலும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களில் வெல்ல வாய்ப்பில்லை என்றே அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக பாஜக இருக்கிறது. அங்கு சில நாட்களில் தேர்தல் நடைபெறும் சூழலில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

delhi election 2025 delhi assembly election aap 2025

ஒரு பக்கம் எப்படியாவது மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் கெஜ்ரிவால் களமிறங்குகிறார். மற்றொருபுறம் தலைநகர் டெல்லியில் வென்றே தீர வேண்டும் என்ற முடிவுடன் பாஜக போட்டியிடுகிறது.


ஆம் ஆத்மி ஆட்சிதான்:

தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் பலோடி சத்தா பஜார் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. 70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி வெல்லவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை அமைப்பார் என்றே பலோடி சத்தா பஜார் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஆம் ஆத்மி வென்ற இடங்கள் கடுமையாகக் குறையும் என கூறப்பட்டுள்ளது.

பலோடி சத்தா பஜார் வெளியிட்டுள்ள சர்வேயில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 38-40 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சி அல்லது கூட்டணிக்கும் 36 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதை விடக் கூடுதல் இடங்களில் ஆம் ஆத்மி வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ள இந்த சர்வே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது..

பாஜகவுக்கு எவ்வளவு இடம்:

மறுபுறம் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாஜக 30-32 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த இரு தேர்தல்களிலும் (2015- 3 தொகுதிகள், 2020- 8 தொகுதிகள்) பாஜக வென்ற இடங்களை விடப் பல மடங்கு அதிகம் என்ற போதிலும், அங்கு கெஜ்ரிவால் ஆட்சியை அமைக்க இது போதுமானதாக இல்லை என்பதையே இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

காங்கிரஸுக்கு நோ சான்ஸ்:

அதேநேரம் காங்கிரஸ் அங்கு ஒரு இடத்திலும் கூட வெல்ல வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015க்கு முன்பு டெல்லி தேர்தல் என்பது காங்கிரஸை சுற்றியே இருந்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பில்லை என்றும் அங்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே மட்டுமே போட்டி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லி தேர்தல் 2020:

கடந்த 2020ம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை அங்கு ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது. பாஜக அந்த முறையே இறங்கி வேலை செய்த போதிலும் கெஜ்ரிவாலை வீழ்த்த முடியவில்லை. அந்தத் தேர்தலில் கெஜ்ரிவால் கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62ல் வாகை சூடியது. பாஜகவால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+