கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணை.. பரிந்துரை செய்த டெல்லி ஆளுநர்.. நாட்டிலேயே முதல் முறை!
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரை செய்துள்ளார். தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக குற்றம்சாட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்ஐஏ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தேவேந்திர பால் புல்லரை விடுதலை செய்வதற்காக காலிஸ்தான் ஆதரவு குழுவான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பிடம் இருந்து 2014 - 2022 வரை ரூபாய் 134 கோடி பணம் பெற்றதாகவும், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான உணர்வுகளை தூண்டுவதாகவும் அகில இந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஷூ மோங்கியா அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனா இந்த பரிந்துரையைச் செய்துள்ளார்.
'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பிடம் இருந்து, அவர் நிதி பெற்றதாக உள்துறை அமைச்சகத்திற்கு உலக இந்து கூட்டமைப்பின் அஷூ மோங்கியா என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தவாறே டெல்லி முதல்வராகப் பணியாற்றி வருகிறார் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஆளும் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், தற்போது என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications