டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை- ஷாஹின் பாக் போராட்டத்துக்கு நெருக்கடி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தாக்குதல் அச்சத்தால் டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாஹின் பாக் போராட்டக்காரர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

    கொரோனாவுக்கு இந்தியாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தாக்குதலைத் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

    Delhi govt bans gatherings of more than 50

    பொதுமக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கும் மார்ச் 31 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் டெல்லியிலும் ஏராளமான கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    டெல்லியில் 50 பேருக்கும் அதிகமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து நைட் கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்களும் மார்ச் 31 வரை மூடப்படும்.

    இதனையடுத்து டெல்லி ஷாஹின் பாக்கில் 3 மாதங்களாக மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் தொடருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள், தாங்கள் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் போராட்டத்தைத் தொடருவோம் என அறிவித்துள்ளனர்.

    கொரோனாவை குணப்படுத்த காய்ச்சல் மாத்திரை போதும்... ஜெகன்மோகன் ரெட்டி கூல் பேட்டிகொரோனாவை குணப்படுத்த காய்ச்சல் மாத்திரை போதும்... ஜெகன்மோகன் ரெட்டி கூல் பேட்டி

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் கெஜ்ரிவால், அனைவரும் அரசு பிறப்பித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    The Aam Aadmi Party led Delhi government decided to ban gathering of more than 50 people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X