உங்கள் மனைவி, மகனை கொல்ல போகிறேன்.. நீதிபதியிடம் சொல்லிவிட்டு செய்த காவலதிகாரி.. பரபரப்பு வீடியோ!

டெல்லியில் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருக்கிறார் கிருஷ்னன் காண்ட் சர்மா. இவருடைய மனைவி மற்றும் மகன்தான் தற்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது.

அவர்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டு இருந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங்தான் இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தி இருப்பது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

["அந்த" சத்தம்தான் உதவியது.. சேலம் ரயில் கொள்ளையில் 2 பேர் கைது.. பரபரப்பு வாக்குமூலம் ]

 போன் செய்தார்

போன் செய்தார்

போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் இரண்டு வருடமாக அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அந்த நீதிபதி கிருஷ்னனுக்கு கால் செய்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங், உங்கள் மகன் மற்றும் மனைவியை கொலை செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குடும்பத்திற்கும் போன் செய்து இதை சொல்லியுள்ளார்.

இருவரையும் சுட்டார்

போன் செய்த அடுத்த நொடி போலீஸ் அதிகாரி மஹிபால் சிங், தன்னுடன் காரில் வந்த நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டார். இதில் மனைவிக்கு நெஞ்சில் அடிப்பட்டுள்ளது. மகனுக்கு குண்டு பாய்ந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகியுள்ளது.

கைது

கைது

இதை செய்தவுடன் அந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். ஆனால் போலீசார் அரைமணி நேரத்தில் அவரை பிடித்தனர். அதேபோல் நீதிபதியின் மனைவியின் உடல்நிலை தேறி வருவதாகவும், அவரின் மகன் மட்டுமே மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காரணம்

காரணம்

இதுவரை இவர்களுக்கு இடையில் பெரிதாக பிரச்சனை எதுவும் வந்தது இல்லை. ஆனால் போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடுமையான மனஉளைச்சலில் இருந்த அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+