என்ன அமித்ஷாஜி கரென்ட் ஷாக் அடிச்சிடுச்சா.. எல்லாம் டெல்லி மக்கள் கொடுத்ததுதான்!- ஆம் ஆத்மி கிண்டல்
Recommended Video
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி மக்கள் கரென்ட் ஷாக்கை அளித்துள்ளனர் என ஆம் ஆத்மி சார்பில் ஓக்லா தொகுதியில் போட்டியிட்ட அமனதுல்லா கான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இரு அவைகளிலும் அமலாக்கப்பட்டது. இதை எதிர்த்து அரசியல் கட்சிகள் விவாதங்களில் ஈடுபட்டும் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.

இந்த நிலையில் டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க தவறியதாக டெல்லி ஆம் ஆத்மி அரசு மீது பாஜக கடும் குற்றச்சாட்டை முன் வைத்தது. ஷாகீன்பாக் போராளிகளுக்கு கெஜ்ரிவால் அரசு பிரியாணி வாங்கி தருவதாகவும் குற்றம்சாட்டியது. மேலும் ஷாகீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாகவும் பாஜக கூறியது.
Amanatullah Khan,AAP candidate from Okhla: Dilli ki janta ne aaj BJP aur Amit Shah ji ko current lagane ka kaam kiya hai, ye kaam ki jeet huyi hai aur nafrat ki haar. Maine nahi, janta ne record( his lead margin) toda hai. #DelhiResults pic.twitter.com/tgSbUByDDC
— ANI (@ANI) February 11, 2020
எனினும் இதை ஆம் ஆத்மியும் அந்த நபரின் குடும்பத்தாரும் மறுத்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி 65-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. இதனால் அக்கட்சியே ஆட்சி அமைக்கும் என்பது கண்கூடாக தெரிகிறது.
இதுகுறித்து ஷாகீன்பாக் உள்ள ஓக்லா தொகுதியில் போட்டியிட்ட அமனதுல்லா கான் கூறுகையில் பாஜகவுக்கும் அமித்ஷாவுக்கு உயர் அழுத்த மின்சாரத்தை டெல்லி மக்கள் அனுப்பியுள்ளனர். உழைப்பே உயர்வை தரும். வெறுப்பு அரசியல் என்றைக்கும் தோற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications