Ilaiyaraja: என்னடா இது இளையராஜா-வுக்கு வந்த சோதனை.. 134 பட பாடல்களை பயன்படுத்த தடை!
டெல்லி: சரிகம நிறுவனத்திடம் இருக்கும் 134 பட பாடல்களை பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிம்ம வழங்கவோ கூடாது என இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களின் இசை , ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து நிரந்தர காப்புரிமையை தங்கள் நிறுவனம் பெற்றுள்ளதாக சரிகம தெரிவித்துள்ளது.

ஆனால், இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி Amazon Music, iTunes, JioSaavn போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது. 1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 17(பி) படி, திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட இசை, பாடல் வரிகள் மற்றும் ஒலிப்பதிவுகளுக்கு திரைப்பட தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதை சரிகம தரப்பு வலியுறுத்தியது.
அந்த தயாரிப்பாளர்களிடமிருந்து சரிகம நிறுவனம் நிரந்தரமான, உலகளாவிய உரிமைகளை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்திடம் உள்ள 134 பாடல்களை இளையராஜா உள்ளிட்ட எவரும் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ, மூன்றாம் தரப்பினருக்கு உரிமம் வழங்கவோ தடை விதித்தார்.
இத்தடை இல்லையெனில் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு ஏற்படும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற வழக்குகள் இளையராஜாவுக்கு புதிதல்ல. சமீபத்தில் 'என் இனிய பொன் நிலாவே' பாடல் தொடர்பான வழக்கிலும், 'நகுவ நயனா' பாடல் தொடர்பாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் சரிகமவின் உரிமையை உறுதிப்படுத்தி, இளையராஜாவின் உரிமம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல், பல திரைப்படங்களில் அவரது பழைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்கள் திரை இசை உரிமை தொடர்பான சட்ட விதிகளை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளன. தற்போதைய இடைக்கால தடை தொடர்பாக இரு தரப்பும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராகி வருகின்றன.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications