"2 நாட்களில் செத்துடுவார்.." நீதிமன்றத்திற்கு ஓடிய வழக்கறிஞர்! சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 17 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சூழலில், அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கி, தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக உணவு அளிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை காக்ரோச் ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. முதலில் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி கட்சியினர் இப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

Sonam Wangchuk hunger strike Sonam Wangchuk Health CJP protest

2 நாட்களில் உயிரிழப்பு?

காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இதில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜூன் 28 முதல் அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் வாங்சுக்கின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதாகவும், தற்போதைய சூழலில் அவர் இன்னும் இரண்டு நாட்களுக்குள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை

எனவே, மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு, வாங்சுக்கை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிர் காக்க தேவையான ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுகள் அடங்கிய உணவை ரீதியாக வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. சோனம் வாங்சுக் உயிரிழந்தால் அது இந்தியாவுக்கும் உலகத்திற்கும் பெரும் அவமானமாக அமையும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

உடல்நிலை

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது முதல் சோனம் வாங்சுக் இதுவரை சுமார் 8.5 கிலோ எடையை இழந்துள்ளார். மேலும், அவரது ரத்த அழுத்தம் 109/70 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் படங்களில் அவரது உடல் எடை குறைந்துள்ளது நன்றாகவே தெரிகிறது. வயிறும் ஒட்டி போய் இருக்கிறது. அவர் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் சூழலில், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே, வாங்சுக்கின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவர் உட்காரும்போதோ, எழுந்து நிற்கும்போதோ கடுமையான மயக்கம் ஏற்படுகிறது. கழிவறைக்கு செல்வதற்குக் கூட சிரமப்படுகிறார். மிகுந்த வலியிலும் அவதியிலும் இருக்கிறார். உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுக்கிறார். மத்திய அரசு ஏன் பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என பதிலுக்கு கேட்கிறார்" என்றார்.

நீட் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக கல்வி சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும், வினாத்தாள் கசிவு விவகாரங்களால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் முக்கியமாக இதெற்கால்லாம் தார்மீக பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே வரும் ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வாங்சுக்கின் உடல்நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+