Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் 10 அடி தோசை.. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ரூ. 71,000 பரிசு.. எங்க நடக்குதுனு தெரியுமா?

டெல்லியில் வித்தியாசமாக தோசை சாப்பிடும் போட்டியை உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிடும் நபருக்கு ரூ. 71 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என வித்தியாசமான சாப்பாட்டு போட்டியை அறிவித்துள்ளது டெல்லியில் உள்ள உணவகம் ஒன்று.

எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதே அரை ஜான் வயிற்றுக்காகத்தான் என்பார்கள். அப்படிப்பட்ட வயிற்றுக்கு சாப்பாட்டோடு பெரிய பரிசுத்தொகையும் கிடைக்கிறதென்றால், நிச்சயம் அதற்கு முயற்சி செய்யாமல் இருப்பார்களா? மக்களின் இந்த ஆசை மனோபாவத்தை வைத்துதான், பல உணவகங்கள் விதவிதமான சாப்பாட்டு போட்டிகளை அறிவித்து, தங்களது வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன.

வெளிநாடுகளில் அவர்கள் நாட்டிற்கு தகுந்த உணவுப் பொருட்களை வைத்து போட்டிகள் நடத்தப்படுவது போல், இந்தியாவிலும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் பரோட்டோ, பிரியாணி போன்றவைதான் போட்டிக்கான உணவாக இருக்கும். தற்போது அதில் இருந்து சற்று வித்தியாசமான தோசையை வைத்து டெல்லி உணவகம் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

 தோசை ராமன்கள்

தோசை ராமன்கள்

பழைய திரைப்படம் சபாபதியில் தோசை ராமன் என்றொரு கதாபாத்திரம் வரும். தோசையாக சாப்பிடுவதால் அவரை அப்படி அழைப்பார்கள். நிஜத்திலும் நம்மூரில் அதுபோன்ற தோசை ராமன்கள் அதிகம். இவர்களுக்கு தோசை சுட்டுத் தந்து கட்டுப்படி ஆகாது. 'தோசை தானே எத்தனைக் கொடுத்தாலும் அப்படியே சாப்பிடுவேனே..' என்பார்கள்.

 ரூ. 71,000 பரிசு

ரூ. 71,000 பரிசு

இப்படிப்பட்ட தோசை ராமன்களை குறி வைத்துத்தான் இந்த போட்டியை அறிவித்துள்ளது அந்த உணவகம். டெல்லி டம்மி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது பற்றி ஒரு பதிவு வெளியாக, இணையத்தில் பிரபலமாகி விட்டது இந்தப் போட்டி. கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமானதல்ல. ஏனென்றால் சுமார் 10 அடி நீளமுள்ள தோசையை முழுமையாக சாப்பிட்டால்தான் ரூ. 71,000 பரிசு.

 எளிதான போட்டியல்ல..

எளிதான போட்டியல்ல..

10 அடி நீளமுள்ள தோசையை அவ்வளவு எளிதில் தனி நபரால் சாப்பிட முடியாது என்பதாலேயே இப்படி ஒரு சவாலான போட்டியை அந்த உணவகம் அறிவித்துள்ளது. ஆனாலும் பலர் தங்களது வாயையும், வயிற்றையும் நம்பி இந்த போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். தங்களது சமூகவலைதளப் பக்கங்களிலும் இந்தப் போட்டியைப் பற்றி வீடியோக்களாக பகிர்ந்துள்ளனர்.

 வாயில் தோசை.. கையில் காசு!

வாயில் தோசை.. கையில் காசு!

ஒருவேளை இந்தப் போட்டியில் கலந்து கொண்டு முழு தோசையையும் சாப்பிட முடியவில்லையென்றால், அந்த தோசையின் விலையை பில்லாக கொடுத்துவிட வேண்டும். அந்த 10 அடி தோசையின் விலை ரூ. 1500 ஆகும். சாப்பிட முடியவில்லை என்றால் ரூ. 1500 தான்.. ஆனால் போட்டியில் ஜெயித்தாலோ ரூ. 71 ஆயிரம் பரிசு என துணிந்து பலர் இந்தச் சாப்பாட்டு போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். பார்ப்பொம் முழு தோசையையும் சாப்பிட்டு ரூ. 71 ஆயிரத்தை வெல்லப் போகும் அந்த நிஜ தோசை ராமன் யார் என்று!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+