Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி ஐடிசி சென்ற டிரம்ப்.. வெறும் 15 கிமீ தூரத்தில் கலவரம்.. பகீர்.. என்ன நடக்கிறது தலைநகரில்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல இருக்கும் நிலையில் அங்கு கலவரம் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல இருக்கும் நிலையில் அங்கு கலவரம் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று ஆக்ராவில் தனது குடும்பத்தோடு தாஜ்மஹாலை பார்வையிட்டார். இன்று காலை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார். அவரின் இந்திய வருகை களைகட்டி இருக்கிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கலவரம்

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல இருக்கும் நிலையில் அங்கு கலவரம் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் அங்கு இன்று சிஏஏ போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக வடகிழக்கு டெல்லியில் அதிக அளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தை முதலில் யார் தொடங்கியது என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர் தரப்பு இரண்டும் கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இரண்டு தரப்பு

    அதேபோல் போலீசாரும் கல் வீசி தாக்குதல் நடத்து வீடியோக்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருக்கும் இஸ்லாமியர்களின் கடைகள் பல அடித்து உடைக்கப்பட்டு உள்ளது. காவி உடை அணிந்த பலர் போராட்டம் செய்யும் மக்கள் மீது கல் வீசி தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் அங்கு போராடும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள்

    இன்னொரு பக்கம் போராட்டம் செய்யும் மக்களும் பதில் தாக்குதல் நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி மாறி மாறி நடத்தப்பட்ட தாக்குதலில் டெல்லி போலீஸ் கான்ஸ்டிபில் ஒருவர் பலியானார். இதனால் டெல்லி சிஏஏ போராட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் 10 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    பலி

    பலி

    இந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்களை நோக்கி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி துப்பாக்கியால் சுட்ட நபரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் சிஏஏ போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இவரின் அடையாளம் காணப்பட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் சந்த்பாஹ், ஜாபர்பேட் பகுதிகளில் இந்த கலவரம் நடக்கிறது.

    எங்கே இருக்கிறார்

    எங்கே இருக்கிறார்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இரவு டெல்லி செல்கிறார். அவர் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா சாணக்யா ஹோட்டலில் தங்க உள்ளார். இது டெல்லியில் சாணக்யாபுரியில் அமைந்து இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டுள்ளது. அங்கு கலவரம் எதுவும் தற்போது நடக்கவில்லை. கலவரம் நடக்கும் பகுதியில் இருந்து 15-19 கிமீ தூரத்தில்தான் இந்த ஹோட்டல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+