உலகத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடும் ஜி20 மாநாடு.. டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்!
டெல்லி: டெல்லியில் இரு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் ஜி 20 மாநாடு இன்றும் நாளையும் இரு நாட்கள் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் எல்லாம் நேற்றைய தினம் டெல்லி வந்துவிட்டனர்.

உலகத் தலைவர்கள் ஒன்றும் கூடுவதால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி வரை டெல்லியானது போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். டெல்லி நேற்றைய தினம் முதல் 10 ஆம் தேதி வரை நகரில் பேருந்துகளை இயக்க கூடாது என டெல்லி போக்குவரத்து போலீஸார் தெரிவித்துவிட்டனர்.
உள்ளூர் போலீஸாரும் எல்லை பாதுகாப்பு படையினரும் டெல்லியின் ஷாதாரா மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகுகள் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளிக்கிழமை காலை முதல் போலீஸார் மத்திய டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்குள்ளாகிய பிறகே அனுமதிக்கிறார்கள்.
டெல்லியில் உள்ள 5000 சிசிடிவி கேமராக்களை போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். மாவட்டங்கள் வாரியாக கட்டுப்பாட்டு அறைக்கு வீடியோக்கள் வருகின்றன. 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் வகையில் இரு பாதுகாப்பு குழுவினர் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

வியாழக்கிழமை அதாவது நேற்று முன்தினம் இரவு முதலே அத்தியாவசிய பணிக்கு செல்லாத வாகனங்கள் நகர எல்லையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டன. கனரக வாகனங்கள் , நடுத்தர கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் ஆகியவை டெல்லிக்குள் நுழைய அனுமதி கிடையாது.
எனினும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், பழங்கள், மருந்து பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் உரிய அனுமதியுடன் உள்ளே வர அனுமதிக்கிறார்கள். டெல்லி முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு குழுவின் நாய்கள் படையை சேர்ந்த ஜெனான், மிங், ஜோன், சோசோ மற்றும் ஜிங்கர் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டுள்ளன.
அது போல் வெடிகுண்டு நிபுணர்களும் ராஜ்காட்டில் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறார்கள். 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்து தகவலளிக்குமாறு குடிமக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு உலகத் தலைவர்கள் வருகை தரும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அங்குள்ள நாய்கள், குரங்குகளை அப்புறப்படுத்தும் பணிகளையும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து போலீஸார் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications