''லோன் உல்ப் அட்டாக்''.. டெல்லியில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி பிளான்.. வளைத்து பிடித்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபரை நேற்று டெல்லியில் போலீசார் கைது செய்து உள்ளனர். கடும் துப்பாக்கி சூட்டிற்கு பிறகு ஐஇடி குண்டுகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    ISIS தீவிரவாதி கைது! Uttar Pradesh on alert!

    இந்தியாவில் கேரளா, கர்நாடகா, டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஐஎஸ் அமைப்பின் தெற்காசிய பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் அதிக அளவில் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வந்தது.

    இந்த நிலையில்தான் டெல்லியில் ஐஎஸ் தீவிரவாதி பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசின் உளவு துறைக்கு தகவல் வந்துள்ளது.

    எங்கு

    எங்கு

    டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ரோந்து பணிகளையும், சோதனைகளையும் அதிகப்படுத்துங்கள் என்று போலீசாருக்கு தகவல் பிறந்துள்ளது. டெல்லி டிசிபி இதனால் டெல்லியின் ஸ்பெஷல் செல் படையை கவனமாக இருக்கும்படியும், உளவுத்துறை தகவலின்படி சோதனைகளை செய்யும்படியும் உத்தரவிட்டு இருந்தார்.

    சோதனை செய்தனர்

    சோதனை செய்தனர்

    உளவுத்துறை கொடுத்த தகவலின்படி அபு யூசப் என்ற ஐஎஸ் தீவிரவாதி, நேற்று டெல்லியில் உள்ள தவுலா கான் என்ற பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சிறப்பு படைஅதிரடி சோதனை நடத்த சென்றது. சரியாக 11.30 மணி அளவில் சோதனை நடத்தியது. அப்போது அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

    சண்டை நடந்தது

    சண்டை நடந்தது

    போலீசாரை பார்த்ததும் தீவிரவாதி யூசப், சரமாரியாக சுட்டு இருக்கிறார். போலீசாரும் மாறி மாறி சுட்டு உள்ளனர் . ஆனால் அந்த தீவிரவாதியை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதில் போலீசார் கவனமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் 20 நிமிடம் சண்டைக்கு பின், யூசப்பை போலீசார் கைது செய்தனர். லேசான காயங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

    குண்டுகள்

    குண்டுகள்

    யூசப் இருந்த இடத்தில் இருந்து 2 நவீன ரக ஐடி பாம்கள் இருந்தது. இந்த குண்டுகள் மீட்கப்பட்டது. அதோடு, சில துப்பாக்கிகள்,தோட்டாக்களும் மீட்கப்பட்டது. டெல்லியில் சில இடங்களில் தனித்த தீவிரவாத தாக்குதல் எனப்படும் ''லோன் உல்ப் அட்டாக் (lone wolf attack)'' நடத்த இவர் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    டெல்லியில் இவர் கடந்த ஒரு வாரமாக சென்ற இடங்களில் எல்லாம் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். புத்தா ஜெயந்தி பார்க் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய இடங்களுக்கு யூசப் சென்றதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் எல்லாம் வெடிக்குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமான சோதனைகளை செய்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+