“ஹே பிரபு.. ஹரே ராம்”.. காதலர் தினத்தன்று 16 பேருக்கு கேக் அனுப்பிய இளைஞர்.. வேட்டு வைத்த சொமேட்டோ!
டெல்லி: காதலர் தினத்தன்று, 16 பேருக்கு கேக் அனுப்பியவர் பெயரை வெளியிட்டுள்ளது சொமேட்டோ. தமது கஸ்டமருக்கே வேட்டு வைத்துவிட்டதே சொமேட்டோ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். அன்றைய நாளில் உலகம் முழுதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தன்று உலகின் பலர் தமது மனதிற்கு பிடித்தவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்தினர். ரோஜாப்பூ கொடுத்து காதலைத் தெரிவிப்பது முதல் வாழ்த்து அட்டைகள் வழங்குவது, பரிசுப் பொருட்கள் வழங்குவது, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வது என காதலர் தினத்தன்று காதலர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

காதலர் தின பரிசுகள்: அந்தவகையில், இந்த ஆண்டு காதலர் தினத்தன்றும் இந்தியாவில் ஏராளமானோர், காதலை வெளிப்படுத்தினர். ரோஜாப்பூ கொடுத்து ப்ரொபோஸ் செய்தனர். பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர். அதேபோல, ஆன்லைன் தளங்கள் வாயிலாகவும் பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர்.
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளங்கள் மூலமாக ஏராளமானோர், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு கேக்குகளை அனுப்பியுள்ளனர். அந்தவகையில், இந்த ஆண்டு ஸ்விக்கி, சொமேட்டோவில் அதிக அளவில் கேக் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 அன்றைக்கு நிமிடத்திற்கு 409 கேக்குகள் டெலிவரி செய்யப்பட்டதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொமேட்டோ கூறிய வாழ்த்து: இந்நிலையில், அன்றைய நாளில் சொமேட்டோ நிறுவனத்தின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், “டெல்லியைச் சேர்ந்த தருண் என்பவருக்கு இனிய காதலர் தின வாழ்த்துகள். அவர், காதலர் தினத்தன்று வெவ்வேறு 16 முகவரிகளுக்கு கேக் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்களது வாடிக்கையாளரான தருண் என்பவரை இப்படி மாட்டிவிட்டுவிட்டதே சொமேட்டோ என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். அதேசமயம், சொமேட்டோ நிறுவனம், தங்கள் விளம்பரம், சமூக ஊடக பதிவுகளில் செய்யும் அட்ராசிட்டி அனைவரும் அறிந்ததே. கிண்டலாகவும், ட்ரெண்டுக்கு ஏற்பவும் போஸ்ட் போட்டு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அதுபோலத்தான், இந்த பதிவும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
தருண் பாவம் பாஸ்: பாவம், தருணின் லட்சியத் திட்டத்தை சொமேட்டோ இப்படி பொதுவெளியில் அம்பலப்படுத்தி, அவரது கனவுக்கு வேட்டு வைத்து விட்டதே என நெட்டிசன்கள் கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், பலர், தங்களுக்கு தெரிந்த தருண் என்ற பெயர் கொண்ட நபரை டேக் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர், “தருண் மிகச்சிறப்பான நிர்வாகத் திறன் கொண்டவர். தங்கள் வாடிக்கையாளர்களின் ஜோடிகளுக்கு கேக்குகளை அனுப்பி சிறப்பான சேவைக்காக நற்சான்று பெற்றுள்ளார்” என கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன், “தருணின் கொண்டாட்டத்தை கெடுக்க வேண்டாம்” என்று கமெண்ட் செய்துள்ளார்.
கோள்மூட்டி: மற்றொரு நெட்டிசன், “தருண் தனது திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்த Zomato-வை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நன்கு அறிந்துள்ளார்” என்று கமெண்ட் அடித்துள்ளார். "நாம் அனைவரும் வெறுக்கும், கோள் மூட்டும் பெண் போல் Zomato செயல்படுகிறது” என்று ஒரு X யூசர் கருத்து தெரிவித்துள்ளார்.
“தருண் நல்லா பண்ணாரா இல்லையோ, சொமேட்டோ நீங்க நல்லா பண்ணிட்டீங்க” என கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன். இப்படியாக நெட்டிசன்கள் தாறுமாறு கமெண்ட்களால் சொமேட்டோவின் இந்த ட்வீட் செம ட்ரெண்டாகி விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications