மெட்ரோ ரயில் டிராக்கில் "நடைப்பயிற்சி" செய்த நபர்.. ஊரே கூடி பதறிய வீடியோ காட்சிகள்.. நடந்தது என்ன?
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் யாரோ ஒருவர் நடந்து செல்லும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
சமூகவலைதளங்களில் வெளியாகும் பல விஷயங்களும் வீடியோக்களும் சில நேரங்களில் மனிதநேயத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். சில முறை விமர்சனத்தை முன்வைப்பதாக இருக்கும். சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் கமென்ட்டுகளையும் பார்த்தாலே நமக்கு சிரிப்பை ஏற்படுத்தும்.
அப்படிப்பட்ட வீடியோ, புகைப்படங்களில் சில நமக்கு திகிலை ஏற்படுத்தும். அதாவது ஆபத்தை அறியாமல் வெள்ளநீரில் நின்று கொண்டு செல்பி எடுப்பது, மீன் பிடிப்பது, ஒரு கரையிலிருந்து கொஞ்ச தூரத்திற்கு நடந்து செல்வது, பாறைகளில் நின்று சாகசம் செய்வது என இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

டெல்லி
அந்த வகையில் டெல்லியில் யாரோ ஒரு நபர் மெட்ரோ ரயில் நிலைய இருப்பு பாதையில் நடந்து சல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியில் நாங்லோய் நகரில் உள்ள மெட்ரோ ரயில்நிலையம் எப்போதும் கூட்ட நெரிசலுடன் பிஸியாக இருக்கும். இந்த ரயில் நிலைய டிராக்கில்தான் அந்த நபர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

மெட்ரோ ரயில் டிராக்
மெட்ரோ ரயில் டிராக்குகளில் ரயில் வந்தாலும் ஒதுங்கி செல்ல வழியே இல்லை. அதில் நடந்து செல்லும் போது ரயில் வந்தால் ஒதுங்க முடியாது. அடித்து விட்டு செல்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இந்த நபர் டிராக்கில் நடப்பதை கண்ட பொதுமக்கள் கூட்டமாக கூடி அந்த நபரை கீழே இறங்கி வருமாறு எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

கூச்சல்
ஆனாலும் அந்த நபர் அவர்கள் சொல்வதை கேட்காமல் அவர் பாட்டுக்கு ஒத்தையடி பாதையில் நடப்பது போல் நடந்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் நூற்றுக்கணக்கில் சூழ்ந்து கொண்டு கூச்சல் போட்ட போதிலும் எந்த பலனும் இல்லை. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வேடிக்கை
இந்த வீடியோவுக்கு பலர் வேடிக்கையான கமென்டுகை கொடுத்துள்ளனர். என்ன மதிய உணவுக்கு பிறகு நடைப்பயிற்சியா என்கிறார் ஒரு வலைஞர். வானில் ஏதேனும் படிக்கட்டுகள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்க முயற்சியா என்கிறார் இன்னொரு வலைஞர். தன்னம்பிக்கை என்கிறார் மற்றொரு வலைஞர். உங்கள் வழி தனி வழி என்கிறார் ஒரு நெட்டிசன்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications