டெல்லி மெட்ரோவில் வாயில் குளிர்பானம் பரிமாறி சேட்டை செய்த ஜோடி.. புதுசா இப்ப செய்த வேலையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்மையில் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடி அபத்தமான முறையில் குளிர்பானத்தை குடித்து மோசமாக நடந்து கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விமர்சனம் எழுந்தது. இப்போது அதே காதல் ஜோடி, அதேபோல் மோசமான செயலை நடுரோட்டில் செய்து சமூக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி உள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில், டெல்லியின் சாலையோரத்தில் தம்பதிகள் பால் குடிப்பதாக இருக்கிறது. கேவலமான அந்த வீடியோ இப்போது சமூக ஊடக தளமான 'எக்ஸ்' (டுவிட்டரில்) இல் பரவி, மக்களை வெறுப்பில் ஆழ்த்தி உள்ளது.

Delhi metro: Couple engages in a cringe act by gushing a drink into each others mouth to make reel

குறிப்பிட்ட வீடியோவில் காதலன் தன் காதலியை மடியில் கிடத்தி, பால்பாக்கெட்டை பிய்த்து பாலை முழுமையாக காதலியின் வாயில் ஊற்றுகிறார். பின்னர் காதலன் ஒரு கரண்டியை எடுத்து அவள் வாயில் வைத்தார். அந்த பெண்ணின் வாயிலிருந்து சிறிது பாலை கரண்டியால் எடுத்து சுவைத்தார். இந்த வீடியோ டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் போது மக்கள் சாதாரணமாக நடந்து செல்வதையும், அவர்கள் அந்த சம்பவத்தை கண்டும் காணாமல் புறக்கணித்து செல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். முதல் வீடியோவில் குளிர்பானத்தை பயன்படுத்திய நிலையில், "2வது வீடியோவில் அவர் வைக்கோலை சாப்பிடாதது (மாடுகள்) தன்னை புண்படுத்துகிறது" என்று ஒருவர் ட்விட்டரில் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார். மற்றொரு நபர், "ரீல்ஸ் இந்தியர்களின் தலைமுறையை அழித்து வருகிறது" என்று கூறியுள்ளார். ட்விட்டரில் அந்த ஜோடியின் சேட்டையை பார்த்து பலரும் கொதித்து போய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். எல்லாமே கிண்டலான கருத்துக்கள் ஆகும்.

Delhi metro: Couple engages in a cringe act by gushing a drink into each others mouth to make reel

இதற்கிடையில், முன்னதாக, இந்த ஜோடி மற்றொரு கேவலமான செயலை டெல்லி மெட்ரோவில் முன்பு செய்தது. அந்த வீடியோவில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாயில் குளிர் பானங்களைத் துப்பி பரிமாறுவதாக இருந்தது வீடியோவில், காதலன் ஒரு குளிர்பானத்தை திறந்து காதலிக்கு வாயில் உற்றுவதற்காக மண்டியிடுகிறார்.

பின்னர் காதலின் வாயில் ஊற்றுவார்.பின்னர் அதனை காதலின் வாயில் இருந்து தன் வாய்க்கு பரிமாறுவார். இந்த கேவலமான செயலை பப்ளிக்காக டெல்லி மெட்ரோ ரயிலில் செய்து ரீல்ஸ் ஆக ட்விட்டரில் வெளியிட்டனர். அப்போது இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் எழுந்தது. அந்த சம்பவத்தை செய்த அதே ஜோடி தான், இப்போது டெல்லியில் நடு ரோட்டில் பால் ஊற்றி விளையாடி ரீல்ஸ் வெளியிட்டு சேட்டை செய்திருக்கிறது.

இதற்கிடையில், டெல்லி மெட்ரோ ரயில்களில் இருந்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளிவருவது இது முதல் முறை அல்ல. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களுக்கு தடை விதித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இருந்த போதிலும் டெல்லி மெட்ரோவில் பல தம்பதிகளின் முத்த வீடியோக்கள் இணையத்தில் பல முறை வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சேட்டைகள் செய்பவர்கள் ரீல்ஸ் என்ற பெயரில் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது தான் மோசமான அபத்தம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+