டெல்லி மெட்ரோவில் குறுகுறுன்னு பார்த்த நபர்! டெலீட் செய்தும் போனை பார்த்து ஆடிப்போன பெண்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 2 இளம் பெண்களை, அவர்களின் அனுமதியின்றி ரகசியமாக ஒருவர் வீடியோ, போட்டோக்களை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரீன் பார்க் மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி சென்ற ரயிலில், லோக் நாயக் பவன் மெட்ரோ பகுதிக்கு அருகே இந்த கேவலமான சம்பவம் நடந்துள்ளது.
பிரவீண்யா மற்றும் அவரது தோழி இருவரும் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.. அவர்களுக்கு அருகே ஒரு நடுத்தர வயதுடைய நபர் உட்கார்ந்திருந்தார்.

அப்போது இந்த 2 பெண்களையும் உற்று பார்த்து கொண்டேயிருந்தவர், திடீரென தன்னுடைய செல்போனில் இருவரையும் வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.. இதை பார்த்து 2 பெண்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. ஆனால், அவர்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும், அந்த நபர் கொஞ்சமும் தயக்கமின்றித் தொடர்ந்து அவர்களை உற்றுப் பார்த்தபடி, வீடியோவும் எடுத்து வந்துள்ளார்.
செல்போனை காட்டுங்க
உடனே கொந்தளித்து போன 2 பெண்களும் அந்த நபரிடம், ஏன் எங்களை வீடியோ எடுக்கறீங்க? என்று தட்டிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்நபர், தான் யாரையும், எந்த வீடியோவும் எடுக்கவில்லை என்று சாதித்துள்ளார்..
அப்படியானால், செல்போனை காட்டுங்க என்று அந்நபரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபரோ, எந்த வீடியோவும் எடுக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே, தனது மொபைல் கேலரியில் இருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அவசர அவசரமாக நீக்கியுள்ளார். பிறகு தனது போனில் எதுவுமில்லை எனக் கூறி அவர்களிடம் போனைக் காட்டியுள்ளார்.
ரீசைக்கிள் பின்
அந்தப் பெண்களோ அவரிடமிருந்து போனை பிடுங்கி, அதிலிருந்த "ரீசைக்கிள் பின்" (Recycle Bin) பகுதியை சோதித்துப் பார்த்தபோது, தங்களை அவர் ரகசியமாக எடுத்த வீடியோ அங்கே இருந்தது தெரியவந்தது,
அனுமதியின்றி பிறரை வீடியோ எடுப்பது சட்டப்படி தவறானது என்றும், இது பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் கூறி அந்தப் பெண்கள் அந்த நபரை மெட்ரோவிலேயே கடுமையாக எச்சரித்தனர்.. அத்துடன், இந்த முழுச் சம்பவத்தையும் தங்களின் செல்போனில் பதிவு செய்து, 'பிரவீண்யா' (praveenyaaaa) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
தட்டிக்கேட்காத சக பயணிகள்
"பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பு இருக்கிறதா?" என்ற கேள்வியுடன் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பொதுப்போக்குவரத்தில் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் இதுபோன்ற பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து சமூக இணையவாசிகள் கடும் கண்டனத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.. மேலும் சிலரோ, பெண்களுக்கு இப்படியோரு அநியாயம் நடக்கும்போது, சக பயணிகள் யாரும் தட்டிக்கேட்காமல் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
டெல்லி மெட்ரோ வார்னிங்
டெல்லி மெட்ரோவில் இப்படியான அநாகரீக செயல்கள் நடப்பது சமீப காலமாகவே அதிகரித்தபடி வருவது வேதனைக்குரியது.. இனி இதுபோல் நடக்க கூடாது என்பதற்காகத்தான் டெல்லி மெட்ரோ நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது..
"பயணிகள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது அடிப்படை ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வார்னிங் தந்துள்ளது.
எனினும் சில பயணிகள் இதை காதிலேயே போட்டுக் கொள்வதில்லை போல தெரிகிறது.. அதனால் இந்த தொடர் சம்பவங்கள் டெல்லி மெட்ரோவின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன..!!


Click it and Unblock the Notifications
