திக் திக்… 72 மணிநேரம்… தீவிரவாதிகள் தாக்க வாய்ப்பு.. 5 நகரங்கள் ஹை அலர்ட்
Recommended Video

டெல்லி: டெல்லி, மும்பை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில், அடுத்த 72 மணி நேரங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, நேற்று அதிகாலை 3.30 மணி அளவில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. இதில், பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கியமான முகாம் தகர்க்கப்பட்டு, 350 தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனர்.

90 வினாடிகள் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. சக்தி வாய்ந்த இந்திய விமானங்களை தடுக்க வந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்கள், மிரண்டு பின்வாங்கின.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களில், தீவிரவாதிகள் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லி, மும்பை மற்றும் 5 முக்கிய நகரங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விமானப் படைத் தளம், கடற்படைத்தளம் மற்றும் ராணுவ முகாம்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications