"ஹை - அலர்ட்".. இன்று விவசாய போராட்டத்தை குலைக்க பாக். ஐஎஸ்ஐ அமைப்பு திட்டம்?.. பலத்த பாதுகாப்பு
டெல்லி: டெல்லியில் இன்று நடக்க உள்ள விவசாய போராட்டத்தை குலைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
டெல்லியில் மிகப்பெரிய அளவில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த வருடம் நவம்பர் 26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினார்கள்.
இந்த போராட்டத்தின் 7 மாத முடிவை நினைவு கூறும் வகையில், இன்று டெல்லியில் மாபெரும் போராட்டங்களை நடத்த உள்ளனர்.

போலீஸ்
போராட்டத்தில் பல விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது விவசாய போராட்டம் காரணமாக வன்முறைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுக்க பல்வேறு இடங்களில் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

உளவு
இந்த நிலையில் டெல்லியில் இன்று நடக்கும் போராட்டத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளான். விவசாய போராட்டத்தை குலைக்கும் வகையிலும், போலீசார் மீது தாக்குதல் நடத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் ஐஎஸ்ஐ அமைப்பு செயல்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

அலர்ட்
இது தொடர்பாக டெல்லி போலீசுக்கும், மத்திய பாதுகாப்பு படைக்கும் தகவல் சென்றுள்ளது. உச்சபட்ச பாதுகாப்பு கொடுக்க வேண்டும். போலீசும், விவசாயிகளும் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவு சென்றுஉள்ளது.

மெட்ரோ
ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த சிலர் டெல்லியில் ஊடுருவி உள்ளதாக தகவல் வந்துள்ளது. முக்கியமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகே நடக்கும் விவசாய போராட்டங்களில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications