வெடித்த சர்ச்சை.. முனவர் பரூக்கியின் காமெடி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த டெல்லி போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐதராபாத்தில் பாஜக எம்எல்ஏ ராஜாசிங் நபிகள் நாயகம் குறித்து பேசி கைதாகி கொந்தளிப்பான சூழல் நிலவியதால் இஸ்லாமியரான ‛ஸ்டாண்ட் அப்' நகைச்சுவை கலைஞர் முனவர் பரூக்கியின் நிகழ்ச்சிக்கு டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபல ‛ஸ்டாண்ட் அப்' நகைச்சுவை கலைஞர்களில் ஒருவர் முனவர் பரூக்கி. குஜராத்தை சேர்ந்த இஸ்லாமியரான இவர் பல்வேறு விஷயங்களை நையாண்டியாக கூறி சிரிக்க வைக்கிறார்.

மேலும் இவர் தனது காமெடி மூலம் பாஜக மற்றும் இந்து கடவுள்கள் பற்றி சில கருத்துகளை வைத்து சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி நிகழ்ச்சி

டெல்லி நிகழ்ச்சி

இதனால் முனவர் பருகிக்கு தொடர்ந்து இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நாளை டெல்லியில் முனவர் பரூக்கி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மத்திய டெல்லியில் உள்ள எஸ்பிஎம் சிவிக் சென்டரின் சிபிளாக்கில் அமைந்திருக்கும் கேதார்நாத் சானி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதுபற்றி அறிந்த இந்து அமைப்பினர் அவரது நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

இதுதொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் டெல்லி போலீசில் மனு அளிக்கப்பட்டது. அதன்படி, முனவர் பரூக்கியின் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர் சுரேந்திர குமார் குப்தா கூறுகையில், ‛‛இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியால் அமைதி சீர்குலையலாம் என டெல்லி காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது''என்றார்.

ஐதராபாத் சர்ச்சை

ஐதராபாத் சர்ச்சை

முன்னதாக கடந்த வாரம் முனவர் பரூக்கியின் ஐதராபாத் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த வேளையில் பாஜகவின் தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜாசிங் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் கைது செய்யப்பட்டார். இது கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியது.மேலும் ராஜாசிங் எம்எல்ஏ பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானாவில் ஏற்பட்ட நிகழ்வை குறிப்பிட்டு தான் டெல்லியில் அவரது நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது என பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தினர். அதனடிப்படையில் தான் டெல்லி போலீசார் முனவர் பரூக்கியின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

பெங்களூரை தொடர்ந்து டெல்லி

பெங்களூரை தொடர்ந்து டெல்லி

மேலும் கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் அவரது நிகழ்ச்சிக்கு சமீபத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரது நிகழ்ச்சியை பெங்களூரிலும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லியிலும் அவரது நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது முனவர் பரூக்கியின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கும் ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+