திணறும் டெல்லி போலீஸ்! காவல்துறை பஸ்ஸை மறித்து.. கைது செய்யப்பட்டவர்களை மீட்ட போராட்டக்காரர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள், இடதுசாரிகள், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்து அழைத்து சென்றபோது.. போராட்டக்காரர்கள் சிலர் போலீஸ் வாகனத்தை மறித்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் மீது ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தன. ஆனால், எப்போது தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மத்திய அரசு நீக்கியதோ.. எப்போது SIR நடவடிக்கை தொடங்கப்பட்டு கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்த நீக்கப்பட்டதோ.. அப்போதே இந்த நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் இழந்தன.

Delhi Police

இப்படி இருக்கையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்ற இரண்டு ஆணையர்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார்கள் கிளம்பின. குறிப்பாக SIR உள்ளிட்ட நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் 14 முறை ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதனால் மொத்த எதிர்க்கட்சிகளும் தற்போது ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இப்படியாக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் மொத்தமும் தேர்தல் ஆணையத்தின் மீது செம கடுப்பில் இருக்கின்றன.

காக்ரோச் ஜனதா கட்சி(CJP), கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஒருபடி மேலேபோய்.. வெறும் கண்ட அறிக்கைகளை மட்டும் விடாமல்.. நேரடியாக போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிகள் மாணவர் அமைப்பான AISA, SFI உள்ளிட்டவையும், ஆம் ஆத்மியின் முன்னாள் டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்ட தலைவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை சுமார் 700க்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களை டெல்லி போலீஸ் பேருந்தில் அழைத்து சென்றது.

ஆனால், போராட்டக்காரர்கள் காவல்துறையின் பேருந்துகளை தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டவர்களில் சிலரை எமெர்ஜென்சி எக்ஸிட் மூலம் வெளியேற்றியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்ற CJP போராட்டத்தில், போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்திருந்தனர். ஆனால், அவர்களை அழைத்து சென்ற பேருந்துகளை மறித்த ஆதரவாளர்கள் சிலர், கதவை திறந்துவிட்டு போராட்டக்காரர்ககளை தப்பிக்க வைத்தனர்.

மொத்தத்தில் இந்த போராட்டங்கள் கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதே நேரம் ஞானேஷ் குமார் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+