நாளை கரப்பான்பூச்சி போராட்டத்துக்கு அனுமதியில்லை.. மீறினால் அவ்வளவுதான்.. டெல்லி போலீஸ் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இதற்கு டெல்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கப்படவில்லை என்று டெல்லி இணை காவல் ஆணையர் நுபுர் பிரசாத் தெரிவித்துள்ளதோடு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு வார்னிங்கும் கொடுத்துள்ளார்.

delhi-police-says-no-permission-for-cockroach-janta-party-protest-on-tomorrow

இதுதொடர்பாக டெல்லி இணை காவல் ஆணையர் நுபுர் பிரசாத் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

''கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ் போராட்டத்துக்கு கடந்த 6ம் தேதி அனுமதி கோரி விண்ணப்பம் செய்தார். டெல்லி காவல்துறையை பொறுத்தவரை 10 நாட்களுக்கு முன்பாக போராட்டத்துக்கு அனுமதி கோர வேண்டும் என்பது தான் நடைமுறையாக உள்ளது.

ஆனால் குறித்த காலத்துக்குள் அனுமதி கோராததால் நாளை டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு அனுமதியில்லை. இதற்கு மன்பு ஏற்கனவே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கான வழிக்காட்டுதல்களை மீறி உள்ளது. இது தொடரும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்று கூறியுள்ளார்.

ஆனால் கரப்பான்பூச்சி கட்சியினர் நாளை டெல்லி மந்தரில் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். டெல்லி போலீசார் அனுமதி தராவிட்டால் எங்கெல்லாம் போலீசார் தங்களை நிறுத்துகிறார்கள் அங்கே அமர்ந்து அந்த இடத்தை டெல்லி ஜந்தர் மந்தராக மாற்றி போராட்டம் நடத்துவோம் என்று எற்கனவே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே கூறியிருந்தார்.

இதனால் டெல்லி போலீசார் அனுமதி வழங்காத பட்சத்திலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த துணியலாம். இதனால் போராட்டக்காரர்களை ஆங்காங்கே டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தலாம். நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் தடியடி, கண்ணீர் புகைகுண்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் ஈடுபடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

'SIR' செயல்பாட்டில் இந்தயி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக வெளியான தகவலால் அவர் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து ஏற்கனவே மும்பையில் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு நேற்று பெங்களூர் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர்.

இதன் அடுத்தக்கட்டமாக தான் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்த போராட்டத்தை தடுக்க நாளை அதிகாலை 4 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை புதுடெல்லி ரயில் நிலையம் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையங்களுக்கு வரும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதுதவிர டெல்லியில போலீசார், துணை ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் வழக்கத்தை விட டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+