உ.பி, உத்தரகாண்ட்,பஞ்சாப் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் டெல்லியில் போராடும் விவசாயிகள்?
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க) எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் களமிறங்கக் கூடும் என தெரிகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது.

டெல்லியில் போராட்டம்
அதேநேரத்தில் டெல்லியில் 8 மாதங்களாக மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி விவசாயிகளும் இந்த தேர்தலை குறிவைத்துள்ளனர். அண்மையில் மேற்கு வங்க மாநிலம், தமிழகம் சட்டசபை தேர்தல்களின் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடாது என டெல்லியில் போராடும் விவசாயிகள் குழு பிரசாரம் செய்தது.

பாஜகவுக்கு எதிர்ப்பு
ஆனால் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல்களில் இதனைவிட தீவிரமாக பிரசாரம் செய்வது என களமிறங்க காத்திருக்கின்றனர் விவசாய சங்க நிர்வாகிகள். வாக்கு கேட்டு வரும் பாஜகவினரை கிராமங்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கவும் விவசாய சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் சில விவசாய சங்கங்கள் பஞ்சாப், உ.பி. தேர்தல்களில் போட்டியிடலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியா?
இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், தேர்தல்களில் வாக்களித்து வெற்றி பெற வைப்பது விவசாயிகள். அந்த விவசாயிகள் தேர்தல்களில் போட்டியிடுவது மட்டும் எப்படி தவறாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக அரசு மீது கோபம்
டெல்லியில் இடைவிடாமல் போராட்டம் நடத்தும் விவசாயிகள் இப்படி, மிஷன் பஞ்சாப், மிஷன் உ.பி. என பேசத் தொடங்கி உள்ளனர். டெல்லியில் கொட்டும் பனி, வாட்டும் குளிர், வதைக்கும் வெயில் என 8 மாதங்களாக முகாம் போட்டு போராட்டம் நடத்தியும் மத்திய பா.ஜ.க. அரசு, விவசாய சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்கிற கோபம் விவசாயிகளிடையே கடுமையாக உள்ளது.

பாஜகவுக்கு நெருக்கடி
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், டெல்லி போராட்டத்துக்கு செல்லக் கூடிய விவசாயிகளை தடுக்கவில்லை. பஞ்சாப் மாநில கிராம பஞ்சாயத்துகளில் கூட்டம் போட்டு சுழற்சி முறையில் டெல்லி போராட்டங்களில் பங்கேற்றும் வருகின்றனர். விவசாயிகள் ஒருங்கிணைந்து தேர்தல் களத்துக்கு போனால் அல்லது போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications