டெல்லி போராட்டம் தொடர்பான டூல்கிட் பகிர்ந்த வழக்கு... பெண் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் கைது!
டெல்லி: டெல்லி போராட்டம் தொடர்பான டூல்கிட் பகிர்ந்த வழக்கில் பெண் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் திஷா ரவியை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர்.
இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் 21 வயதான திஷா ரவி என்பவரை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு இன்று கைது செய்துள்ளது. திஷா ரவி யும் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் ஆவார். 2018ஆம் ஆண்டு "Friday for Future" என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்பு பருவநிலை மாற்றத்திற்காக கிரேட்டா தன்பெர்க் போராட்டம் நடத்தியபோது இந்தியாவில் இந்த இயக்கம் உருவாகியது. கைது செய்யப்பட்ட திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications