உங்களுக்கெல்லாம் பெண் போலீசே போதும்.. விமானத்தில் கரப்பான்பூச்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? வீடியோ
டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்களான அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டவர்கள் விமானத்தில் டெல்லி வந்து இறங்கிய நிலையில் அவர்களை விமானத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை பெண் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
இருப்பினும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துவது உறுதி என்று அறிவித்தனர். இந்த போராட்டத்திற்காக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டவர்கள் இன்று மும்பையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் அவர்கள் பயணித்த விமானம் தரையிறங்கியது. உடனடியாக விமானத்திற்குள் நுழைந்த போலீசார் அவர்கள் அனைவரையும் அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்த Detention Centreக்கு கொண்டு செல்லப்பட்டனர். கரப்பான்பூச்சி தலைவர்களை பெண் போலீஸ் அதிகாரிகள் தான் கைது செய்தனர்.
🚨 ABHIJEET DIPKE, SAURAV DAS AND ASHUTOSH RANKA DETAINED FROM INSIDE THEIR FLIGHT 🚨 Shame on you @narendramodi @AmitShah https://t.co/hXl6bzh53i
— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 10, 2026
ஆண் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. பொதுவாக பெரிய பெரிய போராட்டங்களில் ஈடுபடும் ஆண்களை ஆண் போலீசாரும், பெண்களை பெண் போலீசாரும் கைது செய்வார்கள். ஆனால் கரப்பான்பூச்சி தலைவர்களை பெண் போலீசார் வைத்து கைது செய்யப்பட்டு இருப்பதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
அதாவது ஆண் போலீசாரை வைத்து சில சமயங்களில் கைது நடவடிக்கை எடுக்கும்போது கைது செய்யப்படும் நபர்கள் அவர்களை எதிர்த்து போராடாலம். தாக்குதல் நடத்தலாம். ஆனால் பெண் போலீசாரை வைத்து கைது செய்தால் அப்படியான தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறைவு. ஒருவேளை தாக்குதல் நடத்தினால் குறிப்பிட்ட நபர்களை பற்றிய பிம்பம் பொதுவெளியில் பாதிக்கப்படும். இதனால் அவர்கள் பெண் போலீசாரிடம் எதிர்ப்பை காட்டுவது கிடையாது. எனவே எளிதாக கைது செய்ய முடியும்.
இந்த பார்முலாவை பயன்படுத்தி தான் தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைவர்களை டெல்லியில் விமானத்தில் வைத்து பெண் போலீசார் கைது செய்துள்ளனர். அதேவேளையில் நெட்டிசன்கள் சிலர் வேறு மாதிரியான பார்வையை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர்கள், ''சில நேரங்களில் தொடர்ந்து அரசுக்கு தொல்லை தரும் நபர்களை நீங்கள் எல்லாம் எங்களுக்கு பொருட்டே கிடையாது. உங்களை கைது செய் ஆண் போலீசார் வேண்டாம்.. திறமையான பெண் போலீசாரே போதும் என்ற மெசேஜை அரசுகள் அனுப்பும். அந்த வகையில் தான் தற்போது பெண் போலீஸ் அதிகாரிகளை வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என கூறி வருகின்றனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது ஆண் போலீசார் எங்கே? என்று கரப்பான்பூச்சி தலைவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பெண் போலீஸ் அதிகாரிகள் தயவு செய்து கேளுங்கள்.. கேளுங்கள்.. என்று கூறி அவர்களை கைது செய்தனர். முன்னதாக இந்த கைது நடவடிக்கையின்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நிறுவனர் அபிஜித் தீப்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பெண் போலீசார் கைது செய்ய வருவதை அறிந்த அவர் உடனடியாக தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது அவர், ''இதனை பார்க்க ரொம்ப அழகாக உள்ளது. எங்களை விமானத்தில் கைது கண்டிப்பாக கைது செய்வார்கள். இந்திரா காந்தி (எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்) காலத்தில் கூட இப்படி நடந்தது இல்லை. ஆனால் இப்போது நடக்கிறது. இது சர்வாதிகாரம். டெல்லி போலீசார் விமானத்தில் நுழைந்து எங்களை கைது செய்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு பயப்படமாட்டோம். எங்களை கைது செய்யுங்கள்'' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
