15 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்... பனிமூட்டம்...புத்தாண்டின் முதல்நாளில்...உறைந்துபோன தலைநகர்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று 1.1 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையே இருப்பதால், டெல்லி நகரமே கடும் குளிரால் உறைந்த நிலையில் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிருடன், வானை மறைக்கும் அடர் பனிமூட்டத்துடன் புதிய ஆண்டை தொடங்கி இருக்கின்றனர் டெல்லிவாசிகள்.
நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. டிசம்பரில் சராசரி குறைந்த வெப்ப நிலை அளவு மிகவும் சரிந்தது. அதாவது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த வெப்ப நிலை எட்டியது.

இந்த நிலையில் நேற்று தலைநகரின் குறைந்தபட்ச வெப்ப நிலை 3.3 டிகிரி செல்சியசாக இருந்தது. இன்று அது 1.1 டிகிரி செல்ஸியஸ் ஆக சரிந்துள்ளது. இதனால் நகர் முழுவதும் பனிப்போர்வைக்குள் மூடியபடி உள்ளது.
சப்தர்ஜங் மற்றும் பாலம் உள்ளிட்ட பல பகுதியில் அடர் பனிமூட்டம் காணப்பட்டதால், சாலைகள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சாலையோரம் வசிப்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். தன்னார்வலர்கள் அவர்களுக்கு போர்வைகளை வழங்கினார்கள். கடும் குளிரை தாங்க முடியாத சிலர் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
டெல்லியில் கடந்த ஆண்டு ஜனவரியில் 2.4 டிகிரி செல்சியஸ் என்று மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவானது. பொதுவாக 10 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் வெப்ப அளவு குறையும் போது குளிர் அலை என்று அறிவிக்கப்படும். டிசம்பரில் மட்டும் 8 முறை குளிர் அலை வீசியது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மிக குறைந்த வெப்ப நிலை நிலவுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications