புதிய தலைவலி! உச்சம் தொடும் டெங்கு.. 6 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. தலைநகரில் 5270 பேருக்கு பாதிப்பு
டெல்லி: இந்த மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5,270 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பே இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தீவிர கட்டுப்பாடுகள் மூலம் சில நாடுகள் மட்டுமே கொரோனா பாதிப்பை ஓரளவு கட்டுக்குள் வைத்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை 2ஆம் அலையில் உச்சம் தொட்ட கொரோனா அதன் பிறகு மெல்லக் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் டெங்கு
இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து கட்டுக்குள்ளே இருந்து வருகிறது. ஆனால் அதேநேரம் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமாக மழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்றாலும் கூட இந்த ஆண்டு அது மிக மோசமாக உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய உச்சம்
குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு மிக மோசமான அளவுக்குப் பதிவாகியுள்ளது. இதுவரை டெல்லியில் 5270 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்ட டெங்கு பாதிப்புகளில் இது தான் மிக மிக அதிகமாகும். குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2570 பேருக்கு இந்த டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகள்
முன்னதாக கடந்த 2015இல் டெல்லியில் டெங்கு பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 10,600 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது. தலைநகர் டெல்லியில் 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்படும் மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும். இருப்பினும், அடுத்து வந்த ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு டெல்லியில் கணிசமாகக் குறைந்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டெங்கு பாதிப்பு குறைந்த வந்த நிலையில் இந்தாண்டு மீண்டும் அதிகரித்துள்ளது.

திடீர் அதிகரிப்பு
கடந்த 2016இல் 4431 பேருக்கும் 2017இல் 4726 பேருக்கு வைரஸ் பாதிப்பு குறைந்தது. அதைத் தொடர்ந்து 2018இல் 2798 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது 2019இல் 2036ஆகவும் 2020இல் 1072ஆகவும் குறைந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 1196 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நவம்பரில் முதல் 13 நாட்களில் மட்டும் 3740 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. அதேபோல இந்த ஆண்டு டெங்குவால் டெல்லியில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

எப்படி பரவுகிறது
டெங்கு காய்ச்சல் ஏடீஸ் வகை கொசுக்களினாலேயே பரவுகிறது. பொது இடங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்கி இருந்தால், அதில் இந்த கொசுக்கள் மிக எளிதாக இனப்பெருக்கம் செய்யும். இதனால் டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவும். இதன் காரணமாகவே நீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் டெங்கு அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications