47 ஆண்டுகளில் முதல்முறை..! டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. நீச்சல் குளமாக மாறிய விமான நிலையம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிதீவிர கனமழை பெய்துள்ளது. இதனால் வெள்ளநீர் புகுந்து, டெல்லி சர்வதேச விமான நிலையமே மிகப் பெரிய நீச்சல் குளம் போலக் காட்சியளிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
அதேநேரம் சில பகுதிகளில் அதிதீவிர கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அதே நிகழ்வு தான் இப்போது தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாகவே அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகள் அனைத்திலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும் தலைநகரில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளமான விமான நிலையம்
குறிப்பாக இந்த வெள்ளநீர் டெல்லி சர்வதேச விமான நிலையத்திலும் புகுந்துள்ளது. இதனால் டெல்லி விமான நிலையமே மிகப் பெரிய நீச்சல் குளம் போலக் காட்சியளிக்கிறது. இது குறித்த படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியான. இந்நிலையில் இதற்கு டெல்லி விமான நிலையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாகப் பெய்த கனமழை காரணமாக, சிறிது நேரத்திற்கு, விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதாகவும் இருப்பினும் அது உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் டெல்லி விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

விமானங்கள்
தலைநகர் டெல்லியில் இன்று மழை தொடரும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகவும் ஓடுபாதையில் தேங்கியிருந்த மழை நீர் காரணமாகவும் டெல்லிக்கு வரவிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இன்று மாலை நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுவதால், டெல்லி விமான நிலையத்தில் வேறு எந்த கட்டுப்பாடுகளும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.

ஒரே நாளில் 97மிமி மழை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 மிமி மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கனமழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் 3 முதல் 4 அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார், பேருந்துகள் போன்ற வாகனங்களும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.

46 ஆண்டுகளில் அதிகம்
டெல்லியில் இந்த மழைக் காலத்தில் இதுவரை 1100 மிமி மழை பெய்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் தலைநகரில் ஒரு சீசனில் பெய்த மழையில் இது தான் அதிகமாகும். முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு 1050மிமி மழை பெய்திருந்ததே கடந்த 46 ஆண்டுகளில் அதிகபட்சமாக இருந்தது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாகக் கடந்த 1975ஆம் ஆண்டு 1,150 மிமி மழைப் பதிவாகியிருந்தது. அதேநேரம் இந்த ஆண்டில் மழைக்காலம் முடிய இன்னும் சில வாரங்கள் உள்ளதால், இந்த சாதனையும் முறியடிக்கப்படலாம் என்றே வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் பல ஆண்டுகள் போதிய மழை பெய்யாமல் இருப்பதும் இப்படி ஓர் ஆண்டு மட்டும் மழை கொட்டித்தீர்ப்பதும் மிகவும் ஆபத்தானது என்றும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications