பள்ளி ஆசிரியை பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டிய பிரின்சிபல் கைது
பள்ளி ஆசிரியைக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த பிரின்சிபல் அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். ஆசிரியை அளித்த புகாரின் பேரில் பிரின்சிபலை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: கல்விக்கூடங்களும் இப்போது பாலியல் பலாத்கார கூடங்களாக மாறி வருகின்றன. மாணவிகளை சீரழிக்கும் ஆசிரியர்கள் பற்றிய செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. தெற்கு டெல்லியில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியை ஒருவரை பள்ளியின் முதல்வரே போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்துள்ளார். வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக சீரழித்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. போலிசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரின்சிபலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பள்ளி ஆசிரியை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரின்சிபல் அறைக்கு போயுள்ளார். அப்போது ஸ்பெஷல் எடுப்பது பற்றி மீட்டிங் இருப்பதாக கூறி பேசியிருக்கிறார். அப்போது குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்த அந்த பிரின்சிபல் மயக்க நிலையில் இருந்த ஆசிரியை பலாத்காரம் செய்து விட்டார்.

அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு ஆசிரியை அடிக்கடி மிரட்டியுள்ளார். தான் சொல்வதை கேட்காவிட்டால் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுவதாகவும் மிரட்டியே பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பிரின்சிபாலின் கொடுமை தாங்காத அந்த ஆசிரியை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரின்சிபாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வீடியோவை கைப்பற்றி அது இணையதளத்தில் வெளியிடாமல் தடுத்தனர். பிரபல பள்ளியின் ஆசிரியை ஒருவரை பள்ளி பிரின்சிபல் பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications