அடுத்த சர்ச்சை.. டெல்லி பல்கலைக்கழகத்தில் காந்திக்கு பதில் சாவர்க்கர் பாடம்! நிறைவேறிய தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு பதில் சாவர்க்கர் பாடத்திட்டத்தை கொண்டு வர பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தற்போது விவாதத்தை கிளப்பி சர்ச்சையாகி உள்ளது.

சாவர்க்கரை சுதந்திர போராட்ட தியாகி எனவும், நாட்டுக்காக அவர் தியாகங்களை செய்துள்ளதாகவும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கோரிய நபர். வரலாற்றை பாஜக திரித்து கூறி அவரை கொண்டாட பாஜக முயற்சிக்கிறது என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

Delhi University adds Savarkar in political science syllabus and Mahatma Gandhi subject moves to 7th Semester

இதனால் தற்போது சாவர்க்கர் யார்? என்பது தொடர்பான விவாதம் இடைவிடாது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் சாவர்க்கர் பிறந்தநாளான இன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி திரெளபதி முர்மு புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன.

இவ்வாறு தொடர்ந்து சாவர்க்கர் குறித்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தான் டெல்லி பல்கலைக்கழகம் தற்போது புதிய விஷயத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது டெல்லி பல்கலைக்கழக இளங்கலை பிஏ அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது.

இதற்கு பதிலாக தான் சாவர்க்கர் குறித்த பாடத்தை கொண்டு வர டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மாறாக மகாத்மா காந்தியை பற்றிய பாடம் வேறு செமஸ்டருக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 5வது செமஸ்டரில் உள்ள மகாத்கா காந்தியின் பாடத்தை 7வது செமஸ்டருக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால் இது அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விவாதத்தை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் தேசிய கவிஞர் என புகழப்படும் முகமது இக்பாலின் 'சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா' பாடலையும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இது விவாத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+