ஏபிவிபி வசமான டெல்லி யூனிவர்சிட்டி.. சுயேச்சை கூட துணை தலைவர்.. காங்., மாணவர் அமைப்பு வெல்லவே இல்லை
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பாஜகவின் மாணவர் அமைப்பாக செயல்பட்டு வரும் ஏபிவிபி சார்பில் களமிறங்கியங்வர்கள் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிகளில் வெற்றி பெற்றனர். துணை தலைவர் பதவியை சுயேச்சையாக களமிறங்கியவர் கைப்பற்றினார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான் என்எஸ்யூஐ சார்பில் போட்டியிட்டவர்கள் படுதோல்வியடைந்தனர்.

அதன்படி டெல்லி பல்கலைக்கழத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பை சேர்ந்த யாஷ் டபாஸ் மொத்தம் 24,576 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான என்எஸ்யூஐ-வை (National Students' Union of India) சேர்ந்த விஜய் சங்கர் மீனா 22,523 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தர்.
அதேபோல் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவ ரியா சாவடி செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு ரியா சாவடி 21,650 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பின் லக்ஷயா ராஜ் சிங் 16,615 ஓட்டுகள் வாங்கி வாகை சூடினார்.
அதேபோல் தனித்து சுயேச்சையாக களமிறங்கிய ஷோகீன் 30,615 ஓட்டுகள் வாங்கி துணை தலைவராக தேர்வாகி உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் எனஎஸ்யூவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் ஏபிவிபி அமைப்பின் ஐசு மவ்ரியாவை வீழ்த்தினார். ஐசு மவ்ரியா 16,910 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் என்எஸ்யூஐவை சேர்ந்த வீர் சத்ராத் 4,313 வாக்குகள் வாங்கி பின்னுக்கு தள்ளப்பட்டார்.


Click it and Unblock the Notifications
