நாங்க ரீல்ஸ் எடுக்க வரவில்லை! திரண்ட 3,000 டெல்லி பல்கலைக்கழக மாணவிகள்! கொட்டும் மழையிலும் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "நாங்கள் ரீல்ஸ் எடுக்க இங்கு வரவில்லை" என்று முழக்கமிட்டு, டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 3,000 பெண் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தெற்கு டெல்லியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது மட்டுமின்றி கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தேசிய தலைநகரிலேயே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Delhi University Students Protest Delhi Students Protest

போராட்டம்

இதற்கிடையே பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் போராட்டங்களை நடத்தினர். நாங்கள் ரீல்ஸ் எடுக்க வரவில்லை என முழக்கமிட்ட மாணவிகள் அங்கிருந்த விவேகனந்தர் சிலையில் ஏறியும் போராட்டம் நடத்தினர். கடந்த செப்டம்பர் 23-ம் தேதி லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவிகளும் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இப்போது டெல்லி பல்கலைக்கழக மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஆஸ்தா குஞ்ச் பூங்கா பலாத்கார சம்பவத்துக்கு பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக மாணவிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பதிலாக, அந்த இடங்களை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கட்டுப்பாடுகள் மட்டும்!

தெருவிளக்குகள் இல்லாத பகுதிகள், பாதுகாப்பற்ற பயணங்கள், குடும்பத்தினரின் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் மாணவிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற எல்லா பெண்களும் சொல்வது ஒரே விஷயத்தை தான்.. "குற்றங்களைச் செய்வது நாங்கள் இல்லை; ஆனால் கட்டுப்பாடுகள் எங்கள் மீதே விதிக்கப்படுகின்றன" என்பதே அவர்களின் முக்கியக் கேள்வியாக இருந்தது.

முழக்கம்

மேலும், கல்வி நிறுவனங்களில் செயல்படும் புகார் கமிட்டிக்கள் குறித்தும் மாணவிகள் கவலை தெரிவித்தனர். பல்கலைக்கழக நிகழ்ச்சிகள், ஆண்டு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அளிக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்பதே மாணவிகளின் கோரிக்கை. தெருவிளக்குகள், மேம்பட்ட பொது போக்குவரத்து, பாலியல் புகார்களை கையாள்வதில் பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவிகள் கோரினர்.

பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டும் போக்கையும், பெண்களின் உடை மற்றும் நடத்தை குறித்து கட்டுப்பாடுகளை விதிப்பதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். அடிப்படை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். டெல்லி மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க உள்ள பல்வேறு பேராசரியர்கள், மாணவிகளும் சமூக வலைத்தளங்களில் தங்களை ஆதரவை தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?

கடந்த செப்டம்பர் 21ம் தேதி 17 வயது சிறுமி தனது ஆண் நண்பருடன் டெல்லியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவுக்கு சென்றுள்ளார். இரவு 7 மணியளவில் அங்கு வந்த சிலர் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்டு இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமியுடன் இருந்த 17 வயது ஆண் நண்பரை அவர்கள் தாக்கியதாகவும், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அசிப் (31), ஹேமந்த் (31), அவரது சகோதரர் முகேஷ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். துக்ளகாபாத் பகுதியை சேர்ந்த அசிப், ஸ்ரீநிவாஸ்புரி மார்க்கெட்டில் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஹேமந்த் சேகத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாகவும், அவரது சகோதரர் முகேஷ் ஹரியானாவின் பால்வால் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்சி மாணவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+