டெல்லி வன்முறை.. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்
ஹைதராபாத்: டெல்லியில் வன்முறைக்கு காரணமாக பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வன்முறையில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக டெல்லி ஷாஹீன்பாக்கில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜப்ராபாத் பகுதியிலும் போராட்டங்கள் வெடித்தது. இதற்கு எதிராக சிஏஏ ஆதரவு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக மாறி உள்ளது.

கடந்த இரு தினங்களில் மட்டும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி கலவரக்கார்கள் சூறையாடி உள்ளார்கள். கண்ணில் படுபவர்களை எல்லாம் தாக்கும் மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டள்ளன. இந்த மோதலில் 100க்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்
இந்நிலையில் பாஜக எம்பி கபில் மிஸ்ரா, சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக பேசியது தான் வன்முறைக்கு வித்திட்டதாக புகார் எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்க்ள வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். போராட்த்திற்கு அழைப்பு விடுத்துள்ள இந்த மாணவர்கள், டெல்லியில் வன்முறைக்கு காரணமான பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications