வெறும் 180 மீட்டர் தொலைவுக்காக.. ஓலா பைக் புக் செய்த டெல்லி பெண்! காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
டெல்லி: 180 மீட்டர் தொலைவு நடந்தால் வெறும் 2 நிமிடத்தில் வீட்டுக்கு சென்று விடலாம். ஆனால் டெல்லியை சேர்ந்த பெண் நடந்து செல்லாமல் இந்த 180 மீட்டர் தொலைவை கடக்க ‛ஓலா பைக்' முன்பதிவு செய்து பயணித்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இது இணையதளத்தில் அதிகம் கவனம் பெற்ற நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்பட பிற முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்காக வாடகை கார், வாடகை பைக் சேவைகள் உள்ளன. வீடு அல்லது வெளியே எங்கே இருந்தாலும் வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்டவை செல்போன் செயலியில் பதிவு செய்தால் போதும்.

அடுத்த சில நிமிடங்களில் கார், பைக்கில் வந்து நம்மை ‛பிக்அப்' செய்து செல்ல வேண்டிய இடத்தில் இறக்கவிட்டு விடுவார்கள். இந்த சேவையை தற்போது பெரும் நகரங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாகனம் ஓட்ட தெரியாத இளம்பெண்கள் இந்த சேவைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. வெறும் 180 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டுக்கு செல்ல பெண் ஒருவர் ‛ஓலா பைக்கை' முன்பதிவு செய்து பயணித்துள்ளார்.
அதாவது டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தான் வசிக்கும் வீட்டில் இருந்து 180 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து வீட்டுக்கு அவர் செல்ல வேண்டும். ஆனால் அவர் செல்ல வேண்டிய பாதையில் தெருநாய்களின் தொல்லை உள்ளது. ஏராளமான தெருநாய்கள் வலம் வரும் என்பதால் அந்த பெண் வீட்டுக்கு நடந்து செல்ல பயந்தார்.
இதனால் அவர் மாற்றி யோசித்தார். தனது செல்போனில் இருந்த ‛ஓலா' செயலியில் இருந்து ‛ஓலா பைக்' முன்பதிவு செய்தார். அடுத்த சில நிமிடங்கள் ‛ஓலா பைக்' அங்கு வந்தது. பைக் ஓட்டிய நபர் லொகேஷனை செக் செய்தார். அங்கிருந்து 2 நிமிடத்தில் நடந்து செல்லும் தொலைவை காட்டியது. இதனால் சந்தேகம் அடைந்த பைக் ஓட்டுநர். செல்லும் லோகேஷன் சரிதானே? குறைந்த தூரத்தையே காட்டுகிறதே? என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண், ‛‛லோகேஷன் சரிதான். இங்கிருந்து அங்கு செல்லும் பாதையில் தெருநாய்கள் உள்ளது'' எனக்கூறி அந்த பெண் பைக்கில் ஏறி தனது வீட்டுக்கு சென்றார். வாடகை கட்டணமாக ரூ.19 அவர் செலுத்தினார்.இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இது தற்போது இணையதளங்களில் விவாதத்தைஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒருவர், ‛‛டெல்லியில் தெருநாய்களின் தொல்லை எப்படி உள்ளது? என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி'' என்று கூறியுள்ளார். இன்னொரு நபரோ, ‛‛இது ஜோக் அல்ல. தெருநாய்கள் மிகவும் ஆபத்தானவை. டெல்லி மாநகராட்சிஎன்ன செய்து கொண்டிருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேவேளையில் இன்னும் சிலரோ கிண்டல் செய்துள்ளனர். ஒருவர், ‛‛அடுத்த முறை கழிவறையில் பள்ளி இருக்கும். அதற்கும் ஓலா புக் செய்யுங்கள்'' என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛டெல்லியில் நடந்த போட்டியில் தெருநாய்கள் வெற்றி பெற்றுவிட்டது'' என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், ‛‛தெருநாய் தொல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் பைக் சென்ற இடத்தில் ஒரு தெருநாய் கூட இல்லையே?. நாய் மட்டுமில்லை. ஒரு மனிதரை கூட காணவில்லையே'' என கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியாக இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் விவாதமாகி வருகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications