தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கிய டெல்டா வைரஸ்.. ஆனால் பெரிய பாதிப்பு இல்லை - ஐசிஎம்ஆர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக தாக்கம் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஓரே பேராயுதம் தடுப்பூசிதான். ஆனால் இந்த கொடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி சக்தியையும் முறியடிக்கும் ஆற்றல் கொண்டதாக உருமாறியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணம் டெல்டா வைரஸ் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்டா வைரஸ் மாறுபாடு இந்தியாவில் 86% கொரோனா திருப்புமுனை நோயை ஏற்படுத்தியது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

 திருப்புமுனை தொற்று

திருப்புமுனை தொற்று

நோய்த்தடுப்புக்கு பிறகும் ஒருவர் தொற்றுக்கு ஆளானால் திருப்புமுனை தொற்று ஆகும். இந்தியாவின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கோவிஷீல்ட், கோவாக்சின் 2 டோஸ் மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசிகளை பெற்ற 677 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

உயிரிழப்பு குறைவுதான்

உயிரிழப்பு குறைவுதான்

ஆல்பா மாறுபாடு ஆதிக்கம் செலுத்திய வடக்கு பிராந்தியத்தைத் தவிர, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டெல்டா மாறுபாட்டால் (B.1.617.2) 86.09% திருப்புமுனை நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது ஆய்வில் தெரியவந்தது. ஆனால் 9.8 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது. உயிரிழப்பும் 0.4 சதவீதம் மட்டுமே காணப்பட்டது.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

தடுப்பூசியின் முக்கியத்துவம்

ஆகையால், தடுப்பூசி செலுத்துதலை மேம்படுத்துவதும், மக்களை விரைவாக நோய்த்தடுப்பு செய்வதும் கொரோனாவின் மேலும் ஆபத்தான அலைகளைத் தடுப்பதற்கான மிக முக்கியமான உத்தி ஆகும், மேலும் இது சுகாதாரப் பாதுகாப்பு முறை மீதான சுமையைக் குறைக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு மாதிரிகளில் டெல்டா வைரஸின் AY.1 மற்றும் AY.2 வகைகள் ஆகியவை அடையாளம் காணப்பட்டன.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தடுப்பூசி அதிக அளவு பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், இறப்பையும் தடுத்து நிறுத்துகிறது என்று ஆய்வு தெளிவாக கூறியது. மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா, மணிப்பூர், அசாம், ஜம்மு-காஷ்மீர், சண்டிகர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, புது தில்லி, தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாதிரிகள் ஆய்வுக்காக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+