கிளாஸ்கோ மாநாடு.. இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பை மீறி.. பிரதமர் மோடி - கோத்தபாய ராஜபக்சே சந்திப்பு
டெல்லி: கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் கோத்தபாய ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். ஸ்காட்லாந்து தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி ராஜபக்சேவை சந்தித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் அனைவரும் கிளாஸ்கோ நகரில் ஒன்று கூடியுள்ளனர்.
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக கிளாஸ்கோ சென்ற பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

போராட்டம்
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் கிளாஸ்கோ சென்றுள்ளார். அவரது வருகைக்கு எதிராக அங்குள்ள ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை பிரிட்டன் அரசு கைது செய்ய வலியுறுத்தினர். அத்துடன் கோத்தபாய ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை விவரிக்கும் வாகனம் ஒன்றும் கிளாஸ்கோ நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஹோட்டல் முற்றுகை
கிளாஸ்கோ நகரில் கோத்தபாய ராஜபக்சே தங்கி இருக்கும் ஹோட்டலை தமிழர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஒன்று திரண்டு கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், ஸ்காட்லாந்தின் சில பத்திரிகைகளும் கோத்தபாய ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் குறித்த சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன

பிரதமர் மோடி - கோத்தபாய ராஜபக்சே சந்திப்பு
இந்தக் கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் கோத்தபாய ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும், இந்த சந்திப்பு குறித்து படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, கிளாஸ்கோ உச்சி மாநாடு பல்வேறு உலகத் தலைவர்களுடன் உரையாட ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குவதாகப் பதிவிட்டுள்ளார். ஸ்காட்லாந்து தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி ராஜபக்சேவை சந்தித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி பேச்சு
இதையடுத்து கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். காலநிலை மாற்றத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, . சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்கையை முறையை நாம் அமைத்துக் கொள்ள முன் வர வேண்டும் என்றார். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே கார்பன் வெளியேற்றத்தைப் பூஜ்ஜியம் ஆக்கும் இலக்கை கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளையும் அவர் வழங்கினார்.

5 வாக்குறுதிகள்
இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளைப் பிரதமர் மோடி அளித்தார்.
2070க்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வைப் பூஜ்ஜியம் ஆக்கும்.
non-fossil energy திறனை வரும் 2030க்குள் 500 ஜிகாவாட்டாக இந்தியா உயர்த்தும்.
2030-க்குள் இந்தியா தனது பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்கும்
2030-க்குள் இந்தியா தனது மின் தேவையில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும்
2030-க்குள் மொத்த கார்பன் உமிழ்வுகளிலிருந்து 1 பில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை இந்தியா குறைக்கும்
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications