இந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்
டெல்லி: இந்தியா மக்கள்தொகையில் 2%க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மீதமிருக்கும் 98% மக்கள் இன்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில்தான் உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் இந்தியாவில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது வரை இந்தியாவில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியா மக்கள்தொகையில் 2%க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மீதமிருக்கும் 98% மக்கள் இன்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில்தான் உள்ளனர் எனச் சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1.8% மக்களுக்கு மட்டும் கொரோனா இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. மீதமிருப்பவர்களுக்கு கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த 15 நாட்களாகவே இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மே 3ஆம் தேதி ஆக்டிவ் கேஸ்கள் 17.13%ஆக இருந்தது. இது இப்போது 13.3%ஆகக் குறைந்துள்ளது. எட்டு மாநிலங்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
22 மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் 15%கீழ் குறைவாகவே உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், செல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது இந்தியாவிலுள்ள 199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பும் பாசிடிவ் விகிதமும் கடந்த 2 வாரங்களாகவே குறைந்து வருகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications