போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவது.. சாதாரண விஷயம்தான்! மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சமாளிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இந்நிலையில் இதற்கு பதில் அளித்த.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவது சாதாரண மேட்டர்தான் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது, "போராட்டம் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் காவல்துறையின் நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். போராடும் மாணவர்களை கைது செய்வது என்பது சாதாரண சட்ட ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே. இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை.

JP Nadda

நானும் மாணவர் தலைவர்தான்

நானும் ஒரு காலத்தில் மாணவர் தலைவராக இருந்தவன்தான். காங்கிரஸ் ஆட்சியில் எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது.. வகுப்பறையில் இருக்கும்போதே நான் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கிறேன். எனவே சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் இல்லை. எதிர்க்கட்சிகள்தான் தேவையில்லாமல் இதை பெரிதுப்படுத்துகின்றன" என்று கூறியிருக்கிறார்.

என்ன நடந்தது?

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் ஜனதா கட்சியின் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாணவர் அமைப்பான 'இந்திய மாணவர் சங்கம்' (SFI) தீவிரமாக பங்கேற்றிருந்தது. தற்போது டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கும் நிலையில், நேற்றிரவு இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய நிர்வாகியான ஆயிஷா கோஷ் என்பவரை கைது செய்ய போலீஸ் முயன்றிருக்கிறது.

கைது நடவடிக்கை

டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் போலீசார் நுழைந்தபோது, அங்கிருந்த அக்கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் போலீசாருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்கிற நிபந்தனைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்ட பின்னர் ஏன் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்?

கைது செய்ய வரும் போலீசார் ஏன் சீருடையில் இல்லாமல் இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். முதலில் யூனிபார்ம் போட்டு வாங்க.. என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

நாடாளுமன்றத்தில் வாக்குவாதம்

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. ஜான் பிரிட்டாஸ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த நட்டா.. போராடுபவர்கள் போலீசாரின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள ரெடியாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட எஃப்ஐஆர் வாபஸ் பெறாவிட்டால்.. மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று கரப்பான் ஜனதா கட்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+