"24 மணி நேரம் தான் டைம்.." இண்டிகோவுக்கு மத்திய அரசு அதிரடி நோட்டீஸ்! அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
டெல்லி: கடந்த சில நாட்களாகவே நாடு முழுக்க இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளைச் செயல்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை இண்டிகோ எடுக்கத் தவறியதே இந்தச் சிக்கலுக்கு முக்கிய காரணம் என்றும் முறையான திட்டமிடல் இதில் இல்லை என்றும் இண்டிகோ கூறியுள்ளது. இது தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனச் சொல்லி மத்திய அரசு இண்டிகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுக்க ஆதிக்கம் செலுத்தி வரும் விமான நிறுவனமாக இண்டிகோ இருந்து வந்துள்ளது. இந்தியாவின் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் என அனைத்திலும் இண்டிகோ தான் சீரான விமானச் சேவையைக் கொடுத்து வந்தது. இதனால் இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் இண்டிகோ சேவையையே பயன்படுத்தி வந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக நிலைமை மொத்தமாக மாறியது.

இண்டிகோ
இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு விமானங்கள் ரத்தானது அல்லது தாமதமாக இயக்கப்பட்டன. குறிப்பாக சென்னை, டெல்லி, பெங்களூர், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல நகரங்களில் விமானம் மொத்தமாகவும் கூட ரத்து செய்யப்பட்டது.
இந்தப் பாதிப்பு 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னை விமான நிலையத்தில் இன்றும் கூட இண்டிகோ விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மத்திய அரசு நோட்டீஸ்
இதற்கிடையே டிஜிசிஏ எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பெர்ஸுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், இதற்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உரிய பதில் அளிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிசிஏ எச்சரித்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், பயணிகளுக்குக் கடுமையான சிரமம் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதாக டிஜிசிஏ குறிப்பிட்டுள்ளது.
என்ன காரணம்
டிஜிசிஏ அறிவித்திருந்த புதிய விதிமுறைகளைச் சீராகச் செயல்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை இண்டிகோ செய்யத் தவறியதே இந்தச் சிக்கலுக்கு முக்கிய காரணம் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. திட்டமிடல், மேற்பார்வையில் முக்கிய குறைபாடுகள் இருப்பதையே இது காட்டுவதாகவும் டிஜிசிஏ கூறியிருக்கிறது. மேலும், விமான ரத்து, நீண்ட தாமதம் போன்ற சூழ்நிலைகளில் பயணிகளுக்குத் தேவையான தகவல்களையும் வசதிகளையும் இண்டிகோ வழங்கத் தவறிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம் தர நோட்டீஸ்
குறிப்பாக இந்த விவகாரத்தில் இண்டிகோ சிஇஓ மீது டிஜிசிஏ நேரடியாகக் குற்றஞ்சாட்டியது. இண்டிகோ நிறுவனங்கள் சரியாக இயங்குவது மற்றும் பயணிகளுக்கு உரிய வசதிகளை வழங்குவது என இரண்டிலுமே தலைமைச் செயல் அதிகாரி தன் கடமையில் தவறிவிட்டார் என்று டிஜிசிஏ குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என இண்டிகோ தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications