பிரபல யூடியூபர் துருவ் ராட்டி கைது.. கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை ஒடுக்க இறங்கிய போலீஸ்!
டெல்லி: டெல்லியில் இன்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இதில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்று ஆதரவு தரவிருந்தனர். இதற்கிடையே பிரபல யூடியூபர் துருவ் ராட்டி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
நாடு முழுக்க இப்போது தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம் கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டத்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர். இதற்கிடையே இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் அறிவித்திருந்தது.
கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த போராட்டத்தில் பங்கேற்க இருந்த பிரபல யூடியூபர் துருவ் ராட்டியை டெல்லி போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல யூடியூபர் துருவ் ராட்டி, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் செக்டார் 56 பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்கவிருந்த அவர் திடீரென தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி தனது ட்விட்டரில், "துருவ் தாட்டி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தவறான செயல்களை கேள்வி கேட்பவர்களையும், மௌனமாக இருக்க மறுப்பவர்களையும் கண்டு அந்த சர்வாதிகாரி கடும் அச்சம் கொள்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
