"ஓவர்.. ஓவர்”.. சிக்கலை தீர்த்து வைத்த அமித் ஷா.. எடப்பாடி பேச்சை கவனிச்சீங்களா? இனி அவரும் சைலண்ட்?
டெல்லி : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா, நட்டா ஆகியோரை டெல்லியில் சந்தித்தபோது அண்ணாமலையும் உடன் இருந்தார். கடந்த சில வாரங்களாக அண்ணாமலை - அதிமுக இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களை வழங்கி சமரசம் செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளரான பிறகு அமித் ஷாவை முதல்முறையாக நேற்று இரவு சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்றிருந்தார்.

அதிமுக - பாஜக இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், அதிமுக தலைவர்கள் - அண்ணாமலை - அமித் ஷா - நட்டா என டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பு பெரியளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி தரப்பை அமித் ஷா சமரசம் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகித்த அதிமுக பாஜக : தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட வேண்டும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடியாக பேசியிருந்தார் அண்ணாமலை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியை பாஜக தலைமையே முடிவு செய்யும் என்றார். அதற்கேற்ப அமித் ஷாவும், அதிமுக கூட்டணியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அண்ணாமலை அப்போதும் விடாமல் அரசியலில் எதுவும் கல்லில் எழுதப்பட்டவை அல்ல எனச் சீறியிருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு என சீண்டலாகவே சொனனார் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் மீட்டிங் : இந்நிலையில் தான், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க, குஷியானது எடப்பாடி தரப்பு. கர்நாடகா சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவைக் கூட பாஜக கேட்டுக்கொண்டதுமே வாபஸ் பெற்றது அதிமுக. இந்நிலையில் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதும், டெல்லியும் பச்சைக்கொடி காட்டியது.
அதன்படி நேற்று தனது சகாக்களோடு டெல்லிக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு அமித் ஷா, நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இருந்தது தான் ஹைலைட். கர்நாடகா தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்த அண்ணாமலையை, எடப்பாடி மீட்டிங்கிற்காகவே அழைத்தாராம் அமித் ஷா.
எடப்பாடி சொன்ன வார்த்தை : இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை குழப்பமில்லாமல் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிதாகிவிடும், பொது எதிரியான திமுகவை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாஜக - அதிமுக இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கு குறித்து விவாதித்து அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்சனைகளை அமித் ஷா - நட்டா ஆகியோர் சமரசம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளாராம்.
உடனே இணக்கம் : இதனை உறுதி செய்யும் விதமாக சந்திப்பு நடந்த சிறிது நேரங்களிலேயே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் தலைவர்கள், நமது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர்" என புகைப்படங்களைப் பகிர்ந்தார்.
அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, திட்டமிட்டு அதிமுக - பாஜகவை பிரிக்க நினைக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications