பெண்களின் வாக்குகளை அதிகமாக அள்ளியதா பாஜக? உண்மை இதுதான்! அரசியல் விமர்சகர்கள் பகிர்ந்த தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. இந்நிலையில் பெண்களின் வாக்கு பெரும்பான்மையாக பாஜகவுக்குதான் சென்றிருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இது உண்மையில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது. அதேபோல நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரான தலைவர் என்கிற பெருமையையும் மோடி பெற்றிருக்கிறார்.

BJP Lok Sabha Election Results 2024 Women

அதேபோல எதிர் தரப்பில் இந்தியா கூட்டணி, இந்த தேர்தலில் 234 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் மட்டும் தனியாக 99 இடங்களை வெற்றி பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும்.

இந்நிலையில் இந்த தேர்தலில் பெண்களின் வாக்குகள் அதிக அளவில் பாஜகவுக்குதான் சென்றிருக்கிறது என தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உதாரணமாக உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொள்வோம். இந்த மாநிலத்தில் கடைசியாக நடந்து முடிந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாஜகதான் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு முன்னர் இந்த மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை எந்த கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததில்லை. அந்த வகையில் தொடர் வெற்றியின் அடிப்படையில் பாஜக லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது.

ஆனால், மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 33 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் கைப்பற்றி அசத்தியது. இந்த மாநிலத்தில் 17 தொகுதிகளில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். குறிப்பிட்ட சில தொகுதிகளில் இந்த வாக்கு வித்தியாசம் 50 ஆயிரம் வரை இருக்கிறது. இம்மாநிலத்தில் 45% பெண்கள் இந்தியா கூட்டணிக்கும், 42% பெண் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும் வாக்களித்துள்ளனர்.

அதே மேற்கு வங்கத்தை எடுத்துக்கொண்டால், இங்கு மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இங்கு, மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. இதில் 29 தொகுதிகளை திரிணாமுல் கைப்பற்றியுள்ளது. பாஜக 12 தொகுதிகளையும் வசப்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெற்றதை விட 6 தொகுதிகளை பாஜக இங்கு குறைவாகவே பெற்றிருக்கிறது.

இம்மாநிலத்தில் பெண் மற்றும் ஆண் வாக்காளர் விகிதம் 968:1,000 என இருக்கிறது. இது தேசிய பெண், ஆண் வாக்காளர் விகிதமான 948:1,000ஐ விட அதிகமாகும். வாக்களிப்பை பொறுத்தவரை, 53% பெண்கள் திரிணாமுல் காங்கிரசுக்கும், 33% பெண்கள் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர்.

ஆனால் பீகாரில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. இங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 29 தொகுதிகளை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. பெண்களின் வாக்களிப்பு விகிதத்தை பொறுத்தவரை 50% பெண்கள் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், 37% பெண்கள் இந்தியா கூட்டணிக்கும் வாக்களித்திருக்கிறார்.

இப்படியாக மாநிலத்திற்கு மாநிலம் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மாறி மாறி பெரும்பான்மையாக விழுந்திருக்கிறது என அரசியல் ஆய்வாளரும், லோக்நிதி சிடிஎஸ், சிடிஎஸ் டெல்லியின் இணை இயக்குநருமான சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+