மோடி பேசியதில் தப்பு இல்லை.. காங். புகாரை டிஸ்மிஸ் செய்தது தேர்தல் ஆணையம்
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரை தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் தீவிர பரிசீலனை செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கான விதிமுறைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு, விதிமீறல் நடக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்" என்று தெரிவித்தார் ஒரு மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரடியாக குறிப்பிட்டு, வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மக்களை பிரிக்கும் வகையிலும், நரேந்திர மோடி பேசினார் என்று, தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்திருந்தது. ஏப்ரல் 14ம் தேதி மோடியின் முழு பேச்சு அடங்கிய ஆடியோ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையே, மோடி மீது தரப்பட்ட மேலும் சில புகார்கள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது இனிதான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications