பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர்கள் மிஸ்ஸிங்? லிஸ்டோடு வந்து விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசினார். அப்போது கடந்த 2004ம் ஆண்டு முதல் யுபிஏ ஆட்சியின் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில் எந்தெந்த பட்ஜெட்களில் எத்தனை மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதை லிஸ்டு போட்ட அவர், அதற்காக அந்த மாநிலங்களுக்கு முந்தைய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று எடுத்துக் கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.

Budget 2024 Nirmala Sitharaman 2024

இதில் பல்வேறு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சித் தலைவர்கள் பங்கெடுத்துப் பேசினார். அப்போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்றும் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தனர்.

நிர்மலா சீதாராமன்: இதற்கிடையே, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இல்லை என்பதாலேயே அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை என்ற அவர், சிலர் கூறிய தவறான கருத்துகள் ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது என்றும் தவறான கருத்துகளைப் பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2004ம் ஆண்டு முதல் யுபிஏ ஆட்சியின் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில் எந்தெந்த பட்ஜெட்களில் எத்தனை மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதையும் அவர் பட்டியலிட்டார். 2004-2005 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.. அதற்கு யுபிஏ அரசு நிதி ஒதுக்கவில்லை என எடுத்துக் கொள்ள முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், தவறான புரிதலோடு சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

யுபிஏ பட்ஜெட்கள்: பட்ஜெட்கள் அவர் நாடாளுமன்றத்தில் மேலும் பேசுகையில், "நான் 2004-05 நிதியாண்டு முதல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்கள் குறித்த தகவல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 2004-5ல் பட்ஜெட் உரையில் 17 மாநிலங்களின் பெயர் இல்லை. 2006-07ல் 16 மாநிலங்களின் பெயர் இல்லை.. 2009 இடைக்கால பட்ஜெட்டில் 26 மாநிலங்களின் பெயர்கள் இல்லை.. அந்த ஆண்டின் முழு பட்ஜெட்டில் 20 மாநிலங்களின் பெயர்கள் இல்லை. அப்படி என்றால் இந்த மாநிலங்களுக்கு எல்லாம் நிதி ஒதுக்கப்படவில்லையா என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

நிதி இல்லை என அர்த்தம் இல்லை: ஒரு மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை.. இது அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும்.. ஆனாலும், தவறான கருத்துகளை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். மாநிலத்தின் பெயர் குறிப்பிடவில்லை என்பதாலேயே அவர்களுக்கு நிதி இல்லை என சொல்வது எனக்கு வேதனை அளிக்கிறது.

பொய்களைப் பரப்ப முயற்சி: இதுபோன்ற பொய்களைப் பரப்பத் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி வருகிறோம்" என்று அவர் கூறினார். மேலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பைப் பிரதமர் மோடிக்கு வழங்கிய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+