‛‛ஆபாச படம்’’ உள்ளிட்ட வலைதளங்களுக்கு கடிவாளம்.. வருகிறது டிஜிட்டல் இந்தியா மசோதா.. ஏன் முக்கியம்?
டெல்லி: 11 முக்கிய அம்சங்களுடன் டிஜிட்டல் இந்தியா மசோதாவை மத்திய அரசு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. அடுத்ததாக நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் கொண்டு வர வேண்டிய மாற்றம் மற்றும் சட்ட திருத்தம் தொடர்பாக ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் புதிதாக ‛டிஜிட்டல் இந்தியா மசோதா' கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கையாளப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப, ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தான் அந்த மசோதா பற்றி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: டிஜிட்டல் இந்தியா மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா மசோதா குறித்த ஆலோசனைகள் குறித்த இந்த மாதம் தொடங்கும். இந்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.
2014ம் ஆண்டில் இந்தியாவில் டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை. ஆனால் இப்போது நாட்டில் 85 கோடி பேர் இணையதளம் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய இணையதள பயன்பாடு கொண்ட நாடாக நாம் மாறியுள்ளோம். 2025ல் இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயரும். மேலும் தற்போதைய சூழலில் ஒவ்வொரு இணையதளமும் மிகவும் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் செயல்பட வேண்டுமு். இது அந்தந்த இணையதளங்களில் பொறுப்பாகும். இதற்காக டிஜிட்டல் இந்தியா மசோதாவில் ஒரு விதி சேர்க்கப்படும், இது இந்த தளங்களின் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் நிலைநிறுத்துவது தொடர்பானதாகும்.
மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கான சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இணையதளங்களை ஒழுங்குப்படுத்தவும், சைபர் குற்றங்களை எதிர்த்து போராடும் வகையிலும் இந்த மசோதா இருக்கும். இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக 11 விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், மதவெறுப்பை தூண்டுதல், காப்புரிமை மீறல், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது உள்ளிட்ட 11 விஷயங்களை தடுக்க முக்கிய பங்காற்றும்'' என்றார்.
இந்த மசோதா என்பது 11 விஷயங்களை மையப்படுத்தி இருப்பதாக ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த 11 முக்கிய அம்சங்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது இணையதளங்களில் ஆபாச படங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு, குழந்தைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது. காப்புரிமை மீறல், உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புதல், ஆள்மாறாட்டம், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான சாராம்சம், கம்ப்யூட்டர் மால்வேர், தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவும்.
இந்த சாராம்சங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021ன் கடைசி திருத்தத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் கூட இந்த டிஜிட்டல் இந்தியா மசோதா என்பது மேற்கூறிய விஷயங்களால் ஏற்படும் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட இணையதளம் அல்லது அதற்கான பிளாட்பார்ம்களை பொறுப்பேற்கும்படி மத்திய அரசுக்கு சாதகமாக சட்டத்தில் இடம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications