‘பாகுபலி’ கதாசிரியரான ராஜமௌலியின் தந்தைக்கும் எம்பி பதவி - யார் இந்த விஜயேந்திர பிரசாத்?
டெல்லி: மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா மட்டுமின்றி பாகுபலி திரைப்படத்தின் கதாசிரியரும், பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்தும் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்தான்.

மாநிலங்களவை நியமன எம்.பிக்கள்
அதன் அடிப்படையில் தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்து இருக்கிறார்.

யார் இந்த விஜயேந்திர பிரசாத்?
விஜயேந்திர பிரசாத் பிரபல தெலுங்கு மற்றும் இந்தி படங்களை இயக்கி இருக்கிறார். 80 வயதாகும் இவர் மதராஸ் மாகாணம் (இன்றைய ஆந்திரா)வில் உள்ள கொவ்வூரில் பிறந்தார். தெலுங்கு, தமிழ், இந்தி திரையுலகில் பணியாற்றிய இவர், இந்தியாவின் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியராக திகழ்ந்து வருகிறார். அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இயக்குநர் விஜயேந்திர பிரசாத்
அர்தங்கி என்ற திரைப்படத்தின் மூலமாக கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குநராக அடியெடுத்து வைத்த விஜயேந்திர பிரசாத், 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ கிருஷ்ணா, 2011 ஆம் ஆண்டு வெளியான ராஜண்ணா, 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீவல்லி ஆகிய 4 திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். ஆனால், அவர் திரைக்கதையில் வெளியான படங்கள் ஏராளம்.

திரைக்கதை ஆசிரியர்
இயக்குநர் ஆவதற்கு முன்பாகவே கடந்த 1988 ஆம் ஆண்டிலேயே ஜானகி ராமுடு என்ற திரைப்படத்தின் கதையை எழுதி திரையுலகில் அறிமுகம் ஆனார் விஜயேந்திர பிரசாத். அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ், இந்தி படங்கள் பலவற்றுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை, திரைப்படத்தின் கதாசிரியரும் இவரே. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவிக்கும் இவரே திரைக்கதை எழுதினார். விஜய் நடித்த மெர்சலில் துணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.

ராஜமவுலியின் மகன்
விஜயேந்திர பிரசாத்தால் இயக்குநராக திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை என்ற குறையை போக்கிவிட்டார் அவரது மகன் ராஜமவுலி. மாவீரன், நான் ஈ, பாகுபலி முதல் பாகம், பாகுபலி 2 ஆம் பாகம், RRR என ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த அனைத்து திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத் தான். அந்த வகையில் ராஜமவுலின் வெற்றிக்கு முக்கிய காரணம் விஜயேந்திர பிரசாத்.

விருதுகள்
2011 ஆம் ஆண்டு தான் இயக்கிய ராஜண்ணா திரைப்படத்துக்காக நந்தி விருது பெற்றார் விஜயேந்திர பிரசாத். 2015 ஆம் ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அதற்கு திரைக்கதை எழுதியதற்காக 2016 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது வென்றார். அதே படத்துக்காக சோனி கில்டு விருதையும் இவர் வென்றார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications