களமிறங்கும் டிகே சிவக்குமார்.. டெல்லியை கைப்பற்ற காங்கிரஸ் இறக்கிய முக்கிய தலைவர்கள்.. இதோ லிஸ்ட்
டெல்லி: கடந்த 2014, 2015, 2020 என்று 3 தேர்தலில் ஹாட்ரிக் முறையில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. இதில் 2015, 2020 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் விபரம் வருமாறு:
டெல்லியில் கடந்த 2014 முதல் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து வெற்றி பெற வேண்டும் என்றால் 36 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஏனென்றால் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக டெல்லி இருந்தது. 1998, 2003, 2008 என்று 3 தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீக்சித் தான் முதல்வராக இருந்தார். ஆனால் அதன்பிறகு கடந்த 3 தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 2013ல் 8 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் அதன்பிறகு 2015, 2020 ஆகிய தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
தற்போது டெல்லியில் ஆம்ஆத்மி, பாஜக கட்சிகள் பலமாக உள்ளன. இருகட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தேர்தல் பிரசாரங்களை தீவிரமாக்கி உள்ளன. இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியும் இந்த முறை டெல்லியில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்ற தேவையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் டெல்லி சட்டசபை தேர்தலில் முக்கிய தலைவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதில் 40 தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கேசி வேணுகோபால், சச்சின் பைலட், பூபேந்திர சிங் பாகேல், தீபேந்தர் சிங் கூடா, பவன் கேரா, கங்கையா குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ், அல்கா லம்பா, சந்தீப் தீக்ஷீத், அம்ரிந்த் சிங் ராஜ, இம்ரான் பிரதாப்கார்ஜி, காசி நிஜாமுதீன், உதித் ராஜ் உள்ளிட்டவர்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளது. இதில் டிகே சிவக்குமார் மிகவும் முக்கியமான தலைவர்.
கர்நாடகா துணை முதல்வராக இருக்கும் டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் பாஜக இழுக்க முயலும்போதெல்லாம் டிகே சிவக்குமார் தான் காப்பாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல் அரசியல் வியூகத்திலும் டிகே சிவக்குமார் வல்லவர். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் டிகே சிவக்குமாருக்கு நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களின் குட்புக்கில் டிகே சிவக்குமார் இடம்பிடித்துள்ளார். இதனால் டிகே சிவக்குமார் நட்சத்திர பேச்சாளராக இருப்பது மட்டுமின்றி தேர்தலில் வெல்லவும் காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் உதவலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications