சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. ரெஸ்ட் எடுக்க போறேன்! விரக்தியில் பேசிய டிகே சிவக்குமார் - என்னாச்சு?
டெல்லி: கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை தேர்வாகி இருக்கும் நிலையில், நேற்று இரவு பேச்சுவார்த்தையின்போது டிகே சிவக்குமார் செய்தியாளர்கள் விரக்தியோடு பேசி இருக்கிறார்.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்றது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த முதலமைச்சர் யார் என்ற போட்டி கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே தொடர்ந்தது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான அதிகாரம் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைமை சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த மே 15 ஆம் தேதி டெல்லிக்கு சென்ற சித்தராமையா ராகுல் காந்தி, தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் டிகே சிவகுமாரும் 16 ஆம் தேதி டெல்லிக்கு சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரிடம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். நேற்றைய தினம் சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், நேற்று காங்கிரஸ் தலைவர்களுடன் விடிய விடிய டிகே சிவக்குமார் சந்தித்து பேசினார். மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை நள்ளிரவிலும் டிகே சிவகுமாரிடம் டெல்லியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனைகளின் முடிவில் சித்தராமையாவை முதலமைச்சராக அறிவிக்க சிவகுமார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சித்தராமையாவை முதலமைச்சராகவும், சிவகுமாரை துணை முதலமைச்சராகவும் காங்கிரஸ் தலைமை இன்று அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. சித்தராமையாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அவரது ஆதரவாளர்களும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.
#WATCH | Delhi: Karnataka Congress chief DK Shivakumar arrives at the residence of general secretary KC Venugopal.
— ANI (@ANI) May 17, 2023
He says, "There is nothing to tell...we have left it to the high command...High command will take the call. I'm going for rest."#KarnatakaCMRace pic.twitter.com/JK0dSdhUnn
முன்னதாக நள்ளிரவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்ற டிகே சிவகுமார், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, "சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைமையிடம் வழங்கிவிட்டோம். நான் ஓய்வெடுக்க போகிறேன்." என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை, சித்தராமையா முதலமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிகே சிவகுமார், "என்னை கர்நாடகாவின் துணை முதலமைச்சராக்குவது கட்சியின் தலைமை எடுத்த முடிவு. கட்சியின் நலன் கருதி இதை ஏன் ஏற்கக்கூடாது." என்று தெரிவித்து உள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications