முதலை கண்ணீர்! ஜல்லிக்கட்டு முதல் செங்கோல் வரை.. பட்டியலிட்டு கனிமொழியை விளாசிய நிர்மலா சீதாராமன்
டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று கனிமொழி எம்பி பேசியதற்கு இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். ஜல்லிக்கட்டு முதல் செங்கோல் வரை அடுக்கடுக்காக பட்டியல் போட்டு நிர்மலா சீதாராமன், திமுக எம்பி கனிமொழியை விளாசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று 3வது நாளாக விவாதம் நடந்தது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசினார்.

அப்போது அவர் நேற்று பேசிய திமுக எம்பி கனிமொழியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவரது பேச்சை கடுமையாக கண்டித்ததோடு, அவரையும், திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
துரதிர்ஷ்டவசமாக திமுக எம்பி கனிமொழி இங்கே இல்லை(திமுகவினர் வெளிநடப்பு செய்து இருந்தனர்). ஆனால் இந்த நேரத்தை அவருக்கு பதில் சொல்ல பயன்படுத்துகிறேன். செங்கோல் பற்றி தெரியுமா? பாண்டியர்களின் வரலாறு தெரியுமா? வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். இந்தியை திணிக்காதீர்கள். சிலப்பதிகாரம் படியுங்கள் என நேற்று அவர் பேசினார்.
செங்கோல் என்பது நாட்டின் முதல் பிரதமருக்கு தமிழக ஆதினங்கள் சார்பில் வழங்கப்பட்டது. இந்த செங்கோல் ‛வாக்கிங் ஸ்டிக்' போன்று மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் கைத்தடி என எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இது மறக்கடிக்கப்பட் வரலாறு. இந்த செங்கோலை கைத்தடி என எழுதி வைத்திருப்பது தமிழ்நாட்டின் பெருமையை மறக்கடிக்கவில்லை. அது தமிழ்நாட்டுக்கு அவமானம் இல்லையா?. ஆனால் பிரதமர் மோடி அதனை மீட்டு சரியான இடமான லோக்சபாவில் நிறுவியுள்ளார். இது உங்களுக்கு பிரச்சனையா? இது தமிழர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கையா?
காசி-தமிழ் சங்கம் என்பது காசி மற்றும் தமிழ்நாடு இடையேயான ஆழமான தொடர்பை உறுதிப்படுத்தியது. தமிழ் புத்தாண்டை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் முருகனுடன் சேர்ந்து கொண்டாடினார். ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி தமிழ் பற்றி பேசியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பலமுறை தமிழ் மொழி பற்றி பேசியுள்ளார். 10 முதல் 12 முக்கிய குறிப்புகளை புறநானுறு, திருக்குறளில் இருந்து எடுத்து மேற்கொள் காட்டியுள்ளார்.
மேலும் திமுக என்பது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்தது. அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என கூறி தடை செய்தனர். ஆனால் பிரதமர் மோடி 2016ல் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி விளையாட சென்றார். ஆனால் திமுக தற்போது முதலை கண்ணீர் வடிக்கிறது'' என்றார். இந்த வேளையில் முதலை கண்ணீர் என்ற வார்த்தையை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications