இனி தான் ஆட்டமே இருக்கு! "அண்ணாமலையை பார்த்தாலே திமுக தலைவர்களுக்கு பயம்.." பாஜக குஷ்பு ஒரே போடு
டெல்லி: தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, அண்ணாமலையைப் பார்த்து திமுக தலைவர்கள் பயப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த முறை லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
குஷ்பு: இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, "பிரதமர் மோடி வலுவான நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார்.
பயம்: தொடக்கம் முதலே எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை எதிர்த்தே வருகிறார். திமுக தலைவர்களைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் காலையில் அண்ணாமலை இன்று எது குறித்துப் பேசுவாரோ என்ற பயத்துடன் தான் எழுந்து இருக்கிறார்கள். இந்த அச்சத்தின் வெளிப்பாடாகவே திமுக தலைவர் ஒருவர் எம்ஜிஆரை விட மூன்று மடங்கு சிறப்பாக ஸ்டாலின் செயல்படுவதாகக் கூறியுள்ளார். அவர்கள் தடுமாற ஆரம்பித்துள்ளதையே இது காட்டுகிறது. இது தேர்தலுக்காகச் செய்வது இல்லை. இனி தான் மேலும் இருக்கு.
“பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிந்துபோகும்” அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்!
சத்தியமாக இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.. ஏற்கனவே இது குறித்துக் கேட்ட போதும் இதைத் தான் சொன்னேன். யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதைக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் என்பது கட்சியின் வெற்றியாக இருக்க வேண்டும். தனிப்பட்ட நபர்களின் வெற்றி இருந்தால் அதில் லாபம் இல்லை. என்னைப் போட்டியிடச் சொன்னால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். ஆனால், அதைக் கட்சித் தலைமை தான் சொல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை போய்விட்டது: தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இப்போது பல முக்கிய தலைவர்கள் வெளியே வந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து தலைவர்களுக்கும் காங்கிரஸ் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என்பதையே இது காட்டுகிறது.
400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெல்லும். தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவாக இருக்கிறது. அதை நிச்சயம் நாங்கள் நனவாக்குவோம். கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். எங்களைப் பொறுத்தவரை அண்ணாமலை தலைவராக வந்த பிறகு பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்" என்றார்.
விஜய் அரசியல்: தொடர்ந்து விஜய் அரசியல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, "அவர் முதலில் அரசியல் கட்சியைத் தொடங்கட்டும். அறிவிப்பு வந்துள்ளது எல்லாம் சரி.. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம்.. அதற்கு வாழ்த்தும் சொல்லிவிட்டோம். களத்தில் இறங்கி வேலை செய்யட்டும். அதன் பிறகு அவர் குறித்துப் பேசலாம். பலரும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் பெரிதாக இருந்தது இல்லை. விஜய் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்" என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்!












Click it and Unblock the Notifications