கோழிப்பண்ணைத் தொழில் பாதிக்காது! திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் திட்டவட்டம்!
டெல்லி: கோழிப் பண்ணையாளர்கள் நலன் பாதிக்கும் வகையில் எந்த சட்டத்திருத்தமும் கொண்டு வரப்படாது என மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ புருஷோத்தம் ரூபாலா உறுதியளித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கால்நடை பராமரிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி., இராஜேஸ்குமார், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு மசோதா 2022 கீழ் கோழிகளைச் சேர்க்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், ஓமன், மாலத்தீவு, இந்தோனேசியா, வியட்நாம், பூட்டான், ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்து இருபதாயிரம் மெட்ரிக் டன் முட்டைகளையும், இறைச்சிகளையும் இந்தியா ஏற்றுமதி செய்வதாக புள்ளி விவரங்களை அடுக்கினார்.

கோழிப்பண்னைத் தொழில்
நாட்டிலேயே அதிக முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் வழங்கப்படுவதாகவும் திமுக எம்.பி.ராஜேஷ்குமார் கூறினார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 20 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக பேசியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் உறுதி
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு மசோதா 2022 ஆனது கோழிப்பண்ணையாளர்களின் கவலைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாகவும் வளர்ப்புப் பறவைகளை விலங்குகளாகக் கருத முடியாது எனவும் வாதிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீ புருஷோத்தம் ரூபாலா, கோழிப் பண்ணையாளர்கள் நலன் பாதிக்கப்படும் வகையில் மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்ற உறுதியை அளித்தார்.

பொது முக்கியத்துவம்
மேலும் மாநில அரசுகள், கோழிப் பண்ணையாளர்கள், விவசாயிகள் என பல தரப்பட்டோரின் ஆலோசனைகளை பெற்ற பிறகு தான் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் எனக் கூறினார். திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை முன் வைக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications